இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியை தொடங்கியது மத்திய அரசு
இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் முயற்சியை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
இந்தியாவின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் மீனாட்சி லேகி கூறுகையில், நிலைமையை பிரதமர் நேரடியாக கண்காணித்து வருகிறார். முதற்கட்டமாக மாணவர்கள் மற்றும் யாத்ரீகர்கள் வீட்டிற்கு அழைத்து வரப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சண்டை தீவிரமடைந்ததால், டெல் அவிவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான மீட்பு கோரிக்கைகள் வந்தன. வெளியேறும் பட்சத்தில் விமானப்படை மற்றும் கடற்படையினர் தயாராக இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
சுமார் 18,000 இந்தியர்கள் இஸ்ரேலில் சிக்கியுள்ளதாக இந்திய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பெரும்பாலும் சுற்றுலா பயணிகள் மீட்பு கோரிக்கையுடன் வருவதாக தூதரக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
டெல் அவிவில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியப் பிரதிநிதி அலுவலகம் ஆகியவை இந்தியப் பிரஜைகளை 'எச்சரிக்கையாக இருக்கவும்' அவசரகாலத்தில் அலுவலகத்தை நேரடியாகத் தொடர்புகொள்ளவும் அறிவுறுத்தியுள்ளன.
இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
போர்க்கப்பல்கள், ராணுவ விமானங்களை இஸ்ரேலுக்கு அருகில் கொண்டு செல்லும் அமெரிக்கா., தீவிரமடையும் போர்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Indian Students Stuck In Israel. Indians Stuck in Israel, Israel Hamas War, Israel Hamas conflict, Indian Government