கடுமையாகும் விசா விதிமுறைகள்! அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் மீது பாயும் நடவடிக்கை?
அமெரிக்காவில் விசா காலாவதியான பின்னரும் தங்கியிருக்கும் இந்திய மாணவர்கள் மீது நடவடிக்கை பாயும் என தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரம்பின் கட்டுப்பாடு
இந்திய மாணவர்கள் பலர் அமெரிக்காவில் தங்கி படித்து வருகின்றனர். ஆனால், புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் விசா கட்டுப்பாடு நடவடிக்கைகளால் இந்திய மாணவர்களுக்கு நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது.
அதாவது, விசா காலாவதி ஆன பின்னரும் அமெரிக்காவில் தங்கியிருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காலாவதி நடவடிக்கை
அதன்படி, மாணவர் விசா மற்றும் H-1B விசாக்கள் காலாவதியானாலும், நாட்டில் தங்கியிருப்பவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து குடியேற்ற ஆய்வுகள் மையத்தின் நிபுணரான ஜெசிகா எம்.வாகன் கூறுகையில், "கணிசமான எண்ணிக்கையிலான இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் தங்கள் விசா காலாவதியான பிறகும் தங்கியுள்ளனர். 2023ஆம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 7,000 இந்திய மாணவர்கள் தங்கள் விசா காலாவதியான பிறகும் அமெரிக்காவில் தங்கியுள்ளனர்" என்றார்.
இதன் காரணமாக தனிநபர்கள் தங்கள் மாணவர் விசாக்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், அவர்கள் கல்வியை முடித்தவுடன் நாட்டைவிட்டு வெளியேறுவதை உறுதி செய்யவும் கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |