விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள்
பிரித்தானியாவின் கடுமையான விசா கட்டுப்பாடுகள் மற்றும் புலம்பெயர்தல் கொள்கைகளால் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறியுள்ளதாக புள்ளியியல் அலுவலக தரவுகள் தெரிவிக்கின்றன.
வெளியேறிய பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள்
அவ்வகையில், கடந்த ஆண்டில் மட்டும் 45,000 சீன மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறியுள்ளார்கள்.
நைஜீரியாவைச் சேர்ந்த 16,000 பேரும், பாகிஸ்தானைச் சேர்ந்த 12,000 பேரும், அமெரிக்காவைச் சேர்ந்த 8,000 பேரும் பிரித்தானியாவை விட்டு வெளியேறியுள்ளார்கள்.
இந்தியாவைப் பொருத்தவரை, 37,000 இந்திய மாணவர்கள், 18,000 பணியாளர்கள் மற்றும் 3,000 தனிநபர்கள் 2024ஆம் ஆண்டில் பிரித்தானியாவை விட்டு வெளியேறியதாக பிரித்தானியாவின் தேசிய புள்ளியியல் அலுவலகமான ONS தெரிவிக்கிறது.
இந்நிலையில், இப்படி புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை பிரித்தானியாவில் குறையக் காரணம் தங்கள் ஆட்சிதான் என கெய்ர் ஸ்டார்மர் அரசு பெருமையடித்துக்கொள்ள, முந்தைய கன்சர்வேட்டிவ் அரசின் உள்துறைச் செயலரான ஜேம்ஸ் கிளெவர்லியோ, புலம்பெயர்ந்தோரின் இந்த எண்ணிக்கை குறைவுக்குக் காரணம் தான் கொண்டுவந்த விசா கட்டுப்பாடுகள்தான் என்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |