பட்டப்படிப்புக்காக துபாய் சென்றவர்... இன்று ரூ 15,000 கோடி நிறுவனத்தின் உரிமையாளர்
டெல்லியை சேர்ந்த பிரதீக் சூரி இன்று மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவின் முன்னணி மின்னணு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
முன்னணி மின்னணு நிறுவனம்
மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவின் முன்னணி மின்னணு நிறுவனங்களில் ஒன்றான Maser குழுமத்தின் நிறுவனர் பிரதீக் சூரி. இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக தற்போது செயல்பட்டு வருகிறார்.
Maser குழுமம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆப்பிரிக்காவில் ஸ்மார்ட் டிவி உற்பத்தியை முன்னெடுத்து வருகிறது. டெல்லியை சேர்ந்த பிரதீக் சூரி 2006ல் mechanical engineering பட்டப்படிப்பிற்காக துபாய் சென்றுள்ளார்.
இந்த காலகட்டத்தில் அங்கே அவர் இரண்டு முதன்மையான அம்சங்களை கவனித்துள்ளார். ஒன்று ஐக்கிய அரபு அமீரக மக்கள்தொகையின் மகத்தான பன்முகத்தன்மை, இன்னொன்று வரம்பற்ற வாய்ப்புகள்.
சந்தை மதிப்பு ரூ 15,780 கோடி
பொறியியல் பட்டம் பெற்ற பிறகு, சூரி தனது சொந்த தொழிலை முன்னெடுக்கத் தொடங்கினார். 2012ல் Maser நிறுவனத்தை சூரி நிறுவினார். மிகவும் குறைவான விலையில் உயர்தர நுகர்வோர் மின்னணு பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம்.
படிப்படியாக ஆப்பிரிக்காவிலும் தமது கவனத்தை திருப்பினார். ஆப்பிரிக்கா முழுக்க 800,000 அலகுகளை விற்பனை செய்துள்ளார். 2023ல் Maser குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு என்பது ரூ 15,780 கோடி என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |