கம கமனு சுவையான வஞ்சர மீன் குழம்பு செய்வது எப்படி?
Tomato
Green Chilli
Healthy Food Recipes
By Kirthiga
பொதுவாகவே சைவ உணவுகளை விட அசைவ உணவை விரும்பி சாப்பிடுபவர்கள் தான் அதிகம். அதிலும் கடல் உணவான மீனில், சாச்சுரேட் கொழுப்பு உள்ளதால் இது உடல் எடையை அதிகரிக்காது.
உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை அள்ளி தரும். உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், டயட்டில் இருப்போருக்கு உகந்த ஒன்றாகவும் காணப்படுகின்றது.
ஆகவே மீன் வகைகளில் பிரபல்யமான வஞ்சரம் மீன் வைத்து ஊரே மணக்க மீன் குழம்பு எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மீனை ஊறவைக்க
-
வஞ்சரம் மீன் - 1 கிலோ
- மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
-
உப்பு - 1.1/2 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 3 ஸ்பூன்
குழம்பு செய்ய
-
நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்
- கடுகு - 1 ஸ்பூன்
- வெந்தயம் - 1/2 ஸ்பூன்
-
சின்ன வெங்காயம் - 30 நறுக்கியது
- சின்ன வெங்காயம் - 15
- பூண்டு - 15 பற்கள்
- பச்சை மிளகாய் - 3 கீறியது
-
கறிவேப்பிலை - ஒரு கொத்து
- இஞ்சி பூண்டு விழுது - 3 ஸ்பூன்
-
தக்காளி - 4 நறுக்கியது
- கல் உப்பு - 1 ஸ்பூன்
-
மிளகாய் தூள் - 3 ஸ்பூன்
-
தனியா தூள் - 3 ஸ்பூன்
-
கெட்டியான புளி கரைசல் - 1 கப்
- தண்ணீர் - 2 கப்
- கொத்தமல்லி - தேவையான அளவு
செய்முறை
- முதலில் மீனை கல் உப்பு சேர்த்து சுத்தம் செய்துக்கொள்ள வேண்டும்.
- அடுத்து சுத்தம் செய்ய மீனில் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.
- பின் ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு, வெந்தயம் சேர்க்கவும்.
- அடுத்து வெங்காயம் பூண்டு பற்கள் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
-
அடுத்து பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- கல் உப்பு, மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து கலந்துவிடவும்.
-
அதில் புளி கரைசல் மற்றும் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
- இறுதியாக மீன் துண்டுகளை சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் வேகவிட்டு, கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கினால் வஞ்சரம் மீன் குழம்பு தயார்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US