இலங்கைக்கு சென்றடைந்தது இந்திய கிரிக்கெட் அணி! ஒருநாள் போட்டி எப்போது ஆரம்பம்? புகைப்படங்கள்
இந்திய கிரிக்கெட் அணி நேற்று தனி விமானம் மூலம் இலங்கையில் உள்ள கொழும்பு நகருக்கு போய் சேர்ந்துள்ளது.
விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ளது.
இதன் காரணமாக ஷிகர் தவான் தலைமையிலான இரண்டாம் தர இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக மும்பையில் இருந்து நேற்று தனி விமானம் மூலம் இலங்கையில் உள்ள கொழும்பு நகருக்கு போய் சேர்ந்தது.
Touchdown Sri Lanka ???#TeamIndia ?? #SLvIND pic.twitter.com/f8oSX7EToh
— BCCI (@BCCI) June 28, 2021
இந்திய அணியினர் ஹொட்டல் அறையில் 3 நாட்கள் தனிமைப்படுத்துதலை கடைப்பிடிப்பார்கள்.
அவர்கள் வருகிற 2-ந் திகதி முதல் பயிற்சியை தொடங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை-இந்தியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ஜூலை 13-ந் திகதி நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
— BCCI (@BCCI) June 28, 2021