தோனி, கோலியை ஓரங்கட்டிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா! பிரம்மாண்ட சாதனை படைக்க ஆயத்தம்
டி20 கிரிக்கெட்டில் புதிய அசத்தலான சாதனையை இந்திய கேப்டன் ரோகித் சர்மா படைக்கவுள்ளார்.
இலங்கை - இந்தியா இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று நடக்கிறது. இந்நிலையில் இன்று இந்திய அணி வெற்றி பெற்றால் உலகில் எந்தவொரு டி20 கேப்டனும் செய்யாத சாதனையை ரோகித் படைப்பார்.
அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற பெருமையை பெறுவார். அவர் இதுவரை 16 போட்டிகளில் 15 போட்டிகளில் வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார்.
இங்கிலாந்து கேப்டன் மோர்கன், நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் ஆகியோரும் இதே அளவு வெற்றியை தான் பெற்றுத்தந்துள்ளனர். இன்னும் ஒரு வெற்றி பெற்றால் முதலிடத்தை பிடிப்பார்.
இதில் விராட் கோலி 13 வெற்றிகளும், தோனி 10 வெற்றிகளும் பெற்றுத்தந்தனர். ஒட்டுமொத்தமாக ரோகித் இதுவரை 24 டி20 போட்டிகளில் வழிநடத்தி 22 வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார்.
இதே போல இன்று வெற்றி பெற்றால் ரோகித்தின் கேப்டன்சியில் இந்தியாவில் தொடர்ச்சியாக பெறப்போகும் 11வது வெற்றியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.