இலங்கை அணியை தோற்கடித்து தொடரை வென்றதன் மூலம் இந்திய அணி செய்த ஒரு வரலாற்று சாதனை! என்ன தெரியுமா?
இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியை வென்ற இந்திய அணி தொடரை கைபற்றியதோடு புதிய ஒரு வரலாற்று சாதனையையும் படைத்துள்ளது.
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் அதிலும் இந்தியாவே வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியது.
இலங்கை அணிக்கு எதிராக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 92 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது.
அவுஸ்திரேலிய அணியும் நியூசிலாந்துக்கு எதிராக 92 ஒருநாள் போட்டிகளில் வென்றுள்ளது. இலங்கை அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தியதால், ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை (93) பெற்ற அணியாக இந்திய அணி சாதனை படைத்துள்ளது.