இங்கிலாந்திடம் திணறி வரும் இந்தியா! பலோ ஆனை தவிர்க்க இன்னும் எத்தனை ரன்கள் தேவை தெரியுமா
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில், பாலோ ஆனை தவிர்க்க இந்திய அணி போராடி வருகிறது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, இங்கு முதலில் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நேற்று முன் தினம் துவங்கியது. அதன் படி நாணய சுழற்சியில் வென்று விளையாடிய இங்கிலாந்து அணி, ஜோ ரூட்டின் அபார இரட்டை சதத்தால், 578 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆனது.
அதன் பின் முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க வீரரான ரோகித் சர்மா 6 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும், ஷுப்மான் கில் 29 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும் ஜாப்ரா ஆர்ச்சர் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த புஜாரா ஒரு பக்கம் சிறப்பாக விளையாடினாலும், கேப்டன் விராட் கோஹ்லி 11 ஓட்டங்களிலும், ரஹானே 1 ஓட்டத்திலும் வெளியேறியதால், இந்திய அணி ஒரு கட்டத்தில் 73 ஓட்டங்களுக்குள் 4 விக்கெட் இழந்து தடுமாறி வந்தது.
ஆனால், 5-வது விக்கெட்டிற்கு புஜாராவுடன் ஜோடி சேர்ந்த ரிஷப் பாண்ட். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்திய அணியின் ரன் விகிதம் ஜெட் வேகத்தில் எகிறியது.
5-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்தியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
புஜாரா 106 பந்திலும், ரிஷப் பண்ட் 40 பந்திலும் அரைசதம் அடித்தனர். அணியின் எண்ணிக்கை 192-ஆக இருந்த போது, புஜாரா 73 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் விளையாடிய ரிஷப் பண்ட் சதத்தை நோக்கி சென்றார். ஆனால் 88 பந்தில் 9 பவுண்டரி, 5 சிக்சருடன் 91 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 225 ஓட்டங்கள் எடுத்திருந்து.
7-வது விக்கெட்டுக்கு வாஷிங்டன் சுந்தர் உடன் அஷ்வின் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 3-வது நாள் ஆட்ட முடிவில் மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது.
இந்தியா இன்றைய 3-ஆம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 257 ஓட்டங்கள் எடுத்துள்ளது. அஷ்வின் 8 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 33 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்திய அணி பாலோ ஆன் ஆவதை தவிர்க்க 379 ஓட்டங்கள் எடுக்க வேண்டும். இதனால் இந்திய அணிக்கு இன்னும் 122 ஓட்டங்கள் தேவை என்பதால், பலோ ஆனை தவிர்க்குமா? இங்கிலாந்து அணி அதற்குள் சுருட்டுமா? என்பது நாளைய நான்காவது நாள் ஆட்டத்தில் தெரிந்துவிடும்.




