இன்றைய போட்டியில் இந்தியாவின் ப்ளேயிங் 11 இதுதான்.. முக்கிய மாற்றம் கைகொடுக்கும் என நம்பும் ரசிகர்கள்
டி20 உலகககோப்பை தொடரில் இன்றைய ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் இந்தியாவின் ப்ளேயிங் 11 கசிந்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தாங்கள் விளையாடிய முதல் 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.
பாகிஸ்தான் அணிக்கெதிராக 10 விக்கெட் வித்தியாசத்திலும், நியூசிலாந்து அணிக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்திலும் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது இன்று மூன்றாவது லீக் போட்டியில் முகமதுநபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.
ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சில மாற்றங்களை செய்த இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி பல்வேறு விமர்சனங்களை பெற்றுள்ளதால் மீண்டும் பழைய ஆர்டரில் இந்திய அணியை களமிறக்க திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
அதே வேளையில் கடந்து போட்டியில் விளையாடிய வீரர்களில் இஷான் கிஷன் வெளியேற்றப்பட்டு மீண்டும் அணிக்குள் சூர்யகுமார் யாதவ் இடம்பெறுவார் என்று தெரிகிறது.
அதை தவிர வேறு எந்த மாற்றமும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் விளையாடப்போகும் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்த உத்தேச பட்டியல்
1) ரோஹித் சர்மா, 2) கே.எல். ராகுல், 3) விராட் கோலி, 4) சூரியகுமார் யாதவ், 5) ரிஷப் பண்ட், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ரவீந்திர ஜடேஜா, 8) ஷர்துல் தாகூர், 9) முகமது ஷமி, 10) வருண் சக்ரவர்த்தி, 11) பும்ரா.
இந்த போட்டியில் இந்திய அணி மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்கவுள்ளது.