தோனி, கோலியை மிஞ்சிய ரோகித் சர்மா - கேப்டனாக செய்த புதிய சாதனை
வெஸ்ட் இன்டீஸ் அணிக்கெதிரான தொடரின் மூலம் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியது. இதில் ஒருநாள் மற்றும் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக இழந்து வெறுங்கையோடு தங்கள் நாட்டிற்கு செல்கின்றனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒயிட்வாஷ் வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது. அதேசமயம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஒயிட்வாஷ் செய்த இந்திய கேப்டன் (4 முறை) என்ற பெருமையை கேப்டன் ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
அவர் கேப்டனாக செயல்பட்ட குறுகிய காலத்திலேயே இந்த சாதனையை படைத்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த பட்டியலில் விராட் கோலி 3 முறையும், தோனி ஒரு முறையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.