கனடாவில் ரூ.4.5 கோடி சம்பாதிக்கும் இந்திய தம்பதியினர்., அவர்கள் பரிந்துரைக்கும் பாடப்பிரிவுகள்
கனடாவில் வசிக்கும் ஒரு இந்திய தொழில்நுட்ப தம்பதியினர், ஆண்டுக்கு ரூ.4.5 கோடி சம்பாதிப்பதாகவும், இதுபோன்ற உயர்ந்த சம்பளம் பெற பிறரும் எவ்வாறு தங்களை மேம்படுத்திக்கொள்ளலாம் என்பதையும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இத்தம்பதியரை, Salary Scale என்ற இன்ஸ்டாகிராம் சேனல் ரொறன்ரோவில் நடத்திய ஒரு vox pop நேர்காணலில் சந்தித்து பேசினர்.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை., தெளிவான முடிவில் இலங்கை ஜனாதிபதி அனுர
இந்த தம்பதியரைத் தங்கள் வேலையுடனும் சம்பளத்துடனும் தொடர்புடைய கேள்விகளை கேட்டபோது, அவர்கள் இருவரும் தொழில்நுட்ப துறையில் பணியாற்றுவதாகவும், கணவன் ஒரு Programmer-ஆகவும் மனைவி Support துறையில் பணியாற்றுவதாகவும் தெரிவித்தனர்.
இருவரும் ஆண்டுக்கு 100,000 கனடியன் டொலர் சம்பாதிப்பதாகவும், இதன் மூலம் அவர்களின் குடும்ப வருமானம் 200,000 கனடியன் டொலர் (இலங்கை பணமதிப்பில் ரூ.4.5 கோடி) என உயர்ந்துள்ளதாக தெரிவித்தனர்.
திறனை மேம்படுத்துவதற்கான படிப்புகள்:
உயர்ந்த சம்பளம் பெற தங்களைப் போலவே தொழில்நுட்பத்திற்குள் நுழைய விரும்புவோர் என்ன செய்யலாம் என்ற கேள்விக்கு, கணவன், "நீங்கள் ஒரு தொழில்நுட்ப சான்றிதழுக்காகச் செல்லலாம், உதாரணமாக Hadoop certification அல்லது Cloud Certification எடுப்பது நன்மை பயக்கும் என அறிவுரை அளித்தார்.
மேலும், CSM Certification (Certified ScrumMaster) அல்லது PMP Certification (Project Management Professional) போன்ற மேலாண்மையை நோக்கி செல்ல விரும்புவோருக்கு இந்த சான்றிதழ்கள் மிகுந்த உதவியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
அவரது மனைவியும் இதை ஒப்புக்கொண்டு, 'PMP நிச்சயமாக உதவிகரமாக இருக்கும்," என்றார்.
தொழில்நுட்ப பிரிவுகளின் முக்கியத்துவம்:
இன்றைய தொழில்நுட்ப உலகில் PMP சான்றிதழ் எவ்வளவு மதிப்புமிக்கதாக இருக்கின்றது என்ற கேள்விக்கு, கணவன், அது எப்போதும் மதிப்புமிக்கதாகவே இருக்கும் என்றும், குறிப்பாக கிளவுட் சான்றிதழ்கள் மற்றும் cyber security certification கிடைக்கும் வேலை வாய்ப்புகளில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன என்றும் விளக்கினார்.
அதிகார நிலைப்பாட்டில் இருப்பவர்களும், குழுக்களை நன்கு நிர்வகிப்பதற்கான திறன்களும் இன்றும் வேலைகளை மிகச்சரியாக செய்வதில் முக்கியம் வாய்ந்ததாகவே இருக்கும் எனவும் அவர் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Canada, Indian origin Couple in Canada