கனடாவிலிருந்து வெளியேற்றப்பட உள்ள இந்திய இளம்பெண்: நடந்தது என்ன?: ஒரு எச்சரிக்கை செய்தி!

Canada teenager
By Balamanuvelan Feb 17, 2022 12:53 PM GMT
Report

கனடாவுக்கு கல்வி கற்கச் சென்ற இந்திய இளம்பெண் ஒருவர் கனடாவிலிருந்து வெளியேற்றப்பட உள்ளார்.

புலம்பெயர்தல் ஏஜண்டுகளை மட்டுமே கண்மூடித்தனமாக நம்பியதால் இன்று கனடாவிலிருந்து வெளியேற்றப்பட உள்ள Karamjeet Kaur என்னும் அந்த மாணவியின் அனுபவம் மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கை!

இந்தியாவிலுள்ள பஞ்சாபைச் சேர்ந்த Karamjeet சிறுவயதில் விபத்தொன்றில் சிக்கியதால், உடலின் வலது பக்கம் முழுவதும் பாதிக்கப்பட, அவரது வலது கையும், வலது காலும் செயலிழந்துவிட்டன.

எங்கு சென்றாலும் தன்னை ஒரு வேடிக்கைப் பொருளாக மற்றவர்கள் பார்ப்பது Karamjeetக்குப் பிடிக்கவில்லை. பெண் என்றாலே பாரபட்சம் காட்டுவார்கள், அதுவும் உடற்குறைபாடு வேறு இருப்பதால் தன்னை மக்கள் மோசமாக நடத்தியதாக தெரிவிக்கும் அவர், இந்தியாவில் தனக்கு ஒரு நல்ல வேலையோ, கணவரோ கிடைப்பது கடினம் என தீர்மானித்து வெளிநாடு ஒன்றிற்கு சென்று விடுவது என முடிவு செய்துள்ளார்.

கனடாவிலிருந்து வெளியேற்றப்பட உள்ள இந்திய இளம்பெண்: நடந்தது என்ன?: ஒரு எச்சரிக்கை செய்தி! | Indian Teenager To Be Deported From Canada

அதிகம் படிக்காத அவரது பெற்றோர் புலம்பெயர்தல் ஏஜண்ட் ஒருவரின் உதவியை நாட, பெருந்தொகை ஒன்றைப் பெற்றுக்கொண்ட அந்த ஏஜண்ட், மூன்று நாட்களுக்குப் பின் ரொரன்றோவிலுள்ள Seneca கல்லூரியில் Karamjeet ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறி, அந்த கல்லூரி வழங்கியுள்ள அங்கீகாரக் கடிதம் ஒன்றையும் அவரிடம் கொடுத்துள்ளார்.

2018ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், அந்தக் கடிதத்துடன் Karamjeet கனடா வந்தடைய, எல்லை அதிகாரிகள் அந்தக் கடிதத்தை அங்கீகரிக்க, அவருக்கு கல்வி உரிமம் கிடைத்துள்ளது.

Karamjeet கனடா வந்ததும் அந்த புலம்பெயர்தல் ஏஜண்ட் அவரைத் தொடர்பு கொண்டுள்ளார். தனக்கும் Seneca கல்லூரிக்கும் உறவில் பாதிப்பு ஏற்பட்டுவிட்டதாகவும், வேறொரு கல்லூரியில் சேருமாறும் கூற, Karamjeet எட்மண்டனில் உள்ள Norquest கல்லூரியில் இணைந்துள்ளார்.

2020இல், வர்த்தக நிர்வாக மேலாண்மையில் பட்டயப்படிப்பை முடிப்பது வரை எல்லாமே சுமூகத்தான் சென்றிருக்கின்றன. ஆனால், அதற்குப் பின் Karamjeet நிரந்தர வாழிடம் கோரி விண்ணப்பிக்க, அப்போதுதான் பிரச்சினை துவங்கியுள்ளது.

2021ஆம் ஆண்டு, மே மாதம் 25ஆம் திகதி அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று அவருக்குக் கிடைத்துள்ளது. ஆம், கனடா எல்லை பாதுகாப்பு ஏஜன்சி அலுவலர் ஒருவர், Karamjeet அளித்த Seneca கல்லூரி அங்கீகாரக் கடிதம் போலியானது என தெரிவித்துள்ளார்.

கனடாவிலிருந்து வெளியேற்றப்பட உள்ள இந்திய இளம்பெண்: நடந்தது என்ன?: ஒரு எச்சரிக்கை செய்தி! | Indian Teenager To Be Deported From Canada

அதிர்ந்து போன Karamjeet, தான் புலம்பெயர்தல் ஏஜண்டால் ஏமாற்றப்பட்ட விடயத்தை புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் வாரியத்தின் முன் தெரிவித்துள்ளார். ஆனால், வாரியம் அவர் சொன்னதை ஏற்றுக்கொள்ளாமல் அவரை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுவிட்டது. ஒரு மாணவியான அவர், ஒரு புலம்பெயர்தல் ஏஜண்டை மட்டுமே சார்ந்திருக்காமல் தனது அங்கீகாரக் கடிதம் உண்மையானதுதானா என்பதை கல்லூரியிடம் கேட்டு உறுதி செய்திருக்கவேண்டும் என கூறிவிட்டார் முடிவெடுக்கும் அதிகாரி ஒருவர்.

அத்துடன், கனடாவை விட்டு வெளியேறிய பிறகு Karamjeetஆல் ஐந்து ஆண்டுகளுக்கு மீண்டும் கனடாவுக்குத் திரும்பவும் முடியாது.

Karamjeetஇன் சட்டத்தரணியான Manraj Sidhu அந்த உத்தரவை ரத்து செய்ய சட்ட ரீதியாக நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார்.

தன்னை எல்லோரும் பாரபட்சமாக நடத்திய நிலையில், கனடா தனக்கு சொந்தக் காலில் நிற்க வாய்ப்பளித்ததாக தெரிவிக்கும் Karamjeet, கனடாவிலிருந்து வெளியேறினால், அதை மீண்டும் இழக்கவேண்டி வரும் என்று அஞ்சுகிறார்.

கனடாவிலிருந்து வெளியேற்றப்பட உள்ள இந்திய இளம்பெண்: நடந்தது என்ன?: ஒரு எச்சரிக்கை செய்தி! | Indian Teenager To Be Deported From Canada

அத்துடன், தனது அங்கீகாரக் கடிதம் போலியானது எனத் தெரியவந்ததும், இந்தியாவிலிருக்கும் தனது பெற்றோருக்கு அவர் தகவல் கொடுக்க, அவர்கள் பொலிசில் புகாரளிக்க, பொலிசார் அந்த ஏஜண்டை கைது செய்துள்ளார்கள்.

ஜாமீனில் வந்த அவர் தன் குடும்பத்தை மிரட்டுவதாக தெரிவித்துள்ள Karamjeet, தான் இந்தியா திரும்பினால் தன்னை அவரிடமிருந்து யாராலும் காப்பாற்ற முடியாது என்கிறார்.

இந்நிலையில், கருணை மற்றும் மனிதனேய அடிப்படையில் கனடாவில் வாழ Karamjeetஐ அனுமதிக்கக்கோரி இரண்டாவது விண்ணப்பம் ஒன்றை அளிக்க திட்டமிட்டுள்ளார் அவரது சட்டத்தரணியான Sidhu.  


மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US