இந்திய அணியின் அடுத்த கேப்டன் இவராகத் தான் இருப்பார்! புதிய குண்டை தூக்கிப் போட்ட யுவராஜ் சிங்
இந்திய அணியின் முன்னாள் வீரான யுவராஜ் சிங், தன்னுடைய கணிப்பு படி இந்திய அணிக்கு அடுத்த கேப்டன் யார் என்று கூறியுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பிய்ன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தால் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. தற்போது இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான தொடர் நடைபெறவுள்ளது,
இந்த தொடரிலும் கோஹ்லி சொதப்பினால், அவர் கேப்டன் பதவி பறிபோக வாய்ப்புள்ளது. அப்படி கோஹ்லி கேப்டன் இல்லை என்றால் ரோகித், ரஹானே போன்றோருக்கு வாய்ப்பு வரும் என்று கூறப்படும் நிலையில், யுவராஜ் சிங் இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் என்று தன்னுடைய கணிப்பை கூறியுள்ளார்.
அதில், இந்திய அணியின் அடுத்த கேப்டனாக ரிஷப் பண்ட் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. பண்ட் மிகச்சிறந்த வீரர் அவருடைய திறமை தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் வெளிப்பட்டு வருகிறது.
டெஸ்ட் போட்டிகளில் கூட அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியின் முடிவை மாற்றும் அளவிற்கு சிறப்பாக விளையாடி வருகிறார்.
பேட்டிங்கில் மட்டுமின்றி போட்டி முழுவதுமே அவர் நல்ல ஒரு திறனுடன் செயலாற்றி வருகிறார். மேலும் அவர் கேப்டனாக அணியை வழிநடத்தும் திறமை உள்ளவராக நான் கருதுகிறேன். இதனால் நிச்சயம் விரைவில் தொடர்ந்து அவரே இந்திய அணியின் கேப்டனாக வருவார் என்று தான் நினைப்பதாக கூறியுள்ளார்.