பிரான்ஸ் ஈபிள் கோபுரத்துக்குச் செல்லும் இந்தியர்கள் இனி ரூபாயில் பணம் செலுத்தலாம்...
பிரான்சிலுள்ள ஈபிள் கோபுரத்தைக் காணச் செல்லும் இந்திய சுற்றுலாப்பயணிகள், இனி UPI மூலம் இந்திய பணமான ரூபாயிலேயே கட்டணம் செலுத்தலாம்.
பிரான்ஸ் ஜனாதிபதி வருகையைத் தொடர்ந்து வெளியாகியுள்ள அறிவிப்பு
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், இந்தியாவின் 75ஆவது குடியரசு தின விழாக் கொண்டாட்டங்களுக்காக இந்தியா வந்திருந்தபோது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் UPI பயன்பாட்டைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் வசதி குறித்து அவரிடம் விளக்கினார்.
UPI formally launched at the iconic Eiffel Tower at the huge Republic Day Reception. ??➡️??
— India in France (@IndiaembFrance) February 2, 2024
Implementing PM @narendramodi’s announcement & the vision of taking UPI global. pic.twitter.com/abl7IPJ0To
இந்நிலையில், பிரான்சிலுள்ள ஈபிள் கோபுரத்தைக் காணச் செல்லும் இந்திய சுற்றுலாப்பயணிகள், UPI பயன்பாட்டைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட இணையதளத்தில் QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் ஈபிள் கோபுரத்தைக் காண்பதற்கான டிக்கெட்டுகளை எளிதாக முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஈபிள் கோபுரத்தைக் காண அதிக அளவில் செல்லும் வெளிநாட்டவர்களில், இந்திய சுற்றுலாப்பயணிகள் இரண்டாவது இடத்தில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |