கனடாவில் ட்ரூடோ இந்து மக்களை பிளவுபடுத்துகிறார்! இந்திய அமைச்சர் கடும் கண்டனம்
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்துக்களை பிளவுபடுத்துவதாக இந்திய அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு குற்றம்சாட்டியுள்ளார்.
காலிஸ்தான் ஆதரவாளர்கள்
ஒன்ராறியோவின் பிராம்ப்டன் பகுதியில் அமைந்துள்ள இந்து கோவில் மீது, காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் வன்முறை வெடித்தது. அவர்கள் காலிஸ்தான் ஆதரவு சீக்கியர்கள் என்று கூறப்படுகிறது.
பெடரல் அமைச்சர் அனிதா ஆனந்த் இது ஏற்றுக்கொள்ள முடியாத வன்முறை தாக்குதல் என கவலை தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்தியாவின் மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு, இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
ரவ்னீத் சிங்
இதுதொடர்பாக அவர் கூறுகையில், "கடந்த சில நாட்களாக வரும் செய்தி அறிக்கைகள், கனடாவில் உருவாகியுள்ள சூழ்நிலை ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்தது அல்ல. அது இந்துவாக இருந்தாலும் சரி, சீக்கியராக இருந்தாலும் சரி, பிரதமர் ட்ரூடோ அங்குள்ள அனைவரையும் பிரித்துள்ளார்.
நாட்டில் உள்ள பல்வேறு சமூகங்களுக்கு இடையே அவர் பிளவை ஏற்படுத்துகிறார். இந்துக்கள் மீதும், இந்து கோவில்கள் மீதும் நடத்திய தாக்குதல்களை நான் கடுமையாக கண்டிக்கிறேன். காவல்துறையினர் காலிஸ்தான் பிரிவினருக்கு ஆதரவாக நிற்கின்றனர்.
கோவில்கள் தாக்கப்படுகின்றன. யாரும் தடுக்க தயாராக இல்லை. அவர்கள் எப்படி கோஷம் எழுப்புகிறார்கள் மற்றும் காலிஸ்தான் பற்றி வெளிப்படையாக பேசுகிறார்கள்.
அதை பொறுத்துக் கொள்ள முடியாது. இந்த சம்பவத்திற்கு பிறகு கனடா நாட்டிற்கும், அந்நாட்டு பிரதமருக்கும் இதுகுறித்து கருத்துக்கூற தகுதியில்லை" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |