பிரித்தானியாவை அச்சுறுத்தும் இந்திய மாறுபாடு! சீக்கிரம் இதை செய்யுங்கள்.. உள்ளூர் மக்களுக்கு அரசு வலியுறுத்தல்
பிரித்தானியாவின் Newport-ல் உள்ள பள்ளி ஒன்றில் 5 பேருக்கு இந்திய கொரோனா மாறுபாடு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
Burton Borough பள்ளியிலே 5 பேர் இந்திய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Burton Borough பள்ளியில் தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, Newport-ல் பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகள் இருக்கும் குடும்பங்கள் முடிந்தவரை சீக்கிரம் கொரோனா பரிசோதனை செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளியில் கண்டறியப்பட்ட தொற்று பாதித்த அனைவரும் தற்போது சுய தனிமைப்படுத்தலில் இருக்கின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து சுய தனிமைப்படுத்தும் பணியில் இங்கிலாந்து பொது சுகாதாரத்துடன் இணைந்து Telford & Wrekin கவுன்சில்கள் ஈடுபட்டு வருகின்றன.
Newport-ல் பரிசோதனை மையங்கள் திறக்கப்படும் என உள்ளூர் கவுன்சில்கள் அறிவத்துள்ளன.
ஜூன் 21 அன்று பிரித்தானியாவில் மீதமுள்ள அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் நீக்குவதற்கு இந்திய மாறுபாடு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.