இந்திய மாறுபாடு பிரித்தானியாவில் பெரிய பிரச்சினையாக மாறப்போகிறது! அரசாங்க ஆலோசகர் எச்சரிக்கை
இந்திய மாறுபாடு பெரிய பிரச்சினையாக மாறப்போகிறது என பிரித்தானியா அரசாங்க ஆசோசகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்தானியா அரசாங்கத்தின் புதிய மற்றும் அதிகரித்து வரும் வைரஸ் அச்சுறுத்தல் ஆலோசனைக் குழுவில் (Nervtag) உறுப்பினராக இருக்கும் பேராசிரியர் Peter Openshaw இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாம் அனைவரும் ஒருவிதமான இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளோம்.
ஆனால் தற்போது நிலவும் சூழலில் தடுப்பூசி போட தகுதியுள்ள அனைவரையும் தடுப்பூசி போட வைப்பதற்கான முயற்சிகளை நாம் இரட்டிப்பாக்க வேண்டும் என Peter Openshaw கூறினார்.
இந்திய மாறுபாட்டின் அதிகரிப்பு விகிதத்தைப் பார்க்கும்போது, அடுத்த சில வாரங்களில் இது ஒரு பெரிய பிரச்சினையாக மாறப்போகிறது என நான் தனிப்பட்ட முறையில் மிகவும் கவலைப்படுகிறேன்.
மேலும், ஜூ 21ம் திகதியோடு பிரித்தானியாவில் அமுலில் உள்ள அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் தளர்த்த பிரித்தானியா அரசு போட்டுள்ள திட்டம் கண்டிப்பாக இந்தியா மாறுபாட்டால் தாமதமாகும் என பேராசிரியர் Peter Openshaw கூறினார்.