ஓமன் கடலில் சிக்கிய இந்திய கப்பல்: 14 இந்திய மாலுமிகளின் தற்போதைய நிலை?
ஓமன் கடற்கரையில் இந்தியாவின் “விராட் 1” கப்பல் பாதிக்கப்பட்டிருப்பதாக வந்த செய்தியை அடுத்து மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நடுக்கடலில் சிக்கிய இந்தியக் கப்பல் விராட் 1
ஓமன் கடற்கரைக்கு அருகே இந்தியக் கொடி பறக்க விடப்பட்ட இயந்திரமயமாக்கப்பட்ட விராட் 1(Virat 1) கப்பல் இயந்திர கோளாறு காரணமாக பாதிப்படைந்து உள்ளது.

இந்திய கப்பல் விராட் 1 பாதிக்கப்பட்டு இருப்பதை ஞாயிற்றுக்கிழமை ஓமனில் உள்ள இந்திய தூதரகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள விராட் 1 கப்பலில் மொத்தம் 14 பேர் அடங்கிய இந்திய குழுவினர் பயணம் செய்துள்ளனர்.
மீட்புப் பணிகள் தீவிரம்
இந்திய கப்பல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய தூதர அதிகாரிகள் ஓமன் நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

X தளத்தில் பகிரப்பட்ட தகவலில், கப்பலில் பயணம் செய்த 14 இந்தியர்களும் தற்போது உயிர் காக்கும் படகுகள் மூலம் பத்திரமாக வெளியேற்றப்பட்டு தற்போது பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அப்பகுதி வழியாக செல்லும் மற்ற கப்பல்களின் உதவியுடன் பணியாளர்களை மீட்கும் பணியில் இந்திய தூதரகம் வேலை செய்து வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |