78 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக மின்சாரம் கிடைத்த இந்திய கிராமம் எது?
இந்தியாவில் உள்ள கிராமம் ஒன்றிற்கு 78 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக மின்சாரம் கிடைத்துள்ளது.
முதல்முறையாக மின்சாரம்
இந்தியா சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக இந்தியாவில் உள்ள கிராமம் ஒன்றிற்கு மின்சாரம் கிடைத்துள்ளது. இந்திய மாநிலமான ராஜஸ்தான், மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்களுக்கு மின்சாரம் கிடைத்துள்ளது.
அதாவது ராஜஸ்தானில் உள்ள பரன் மாவட்டத்தில், பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு மொத்தம் 40 வீடுகள் உள்ளன. இங்கு சஹாரியா பழங்குடியினத்தை சேர்ந்த 200 பேர் வசித்து வருகின்றனர்.
ஆனால், இப்பகுதிக்கு இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து மின்சாரம் வழங்கப்படவில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளனர்.
இதன்பின்னர், பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார நிலைமைகளை மேம்படுத்தும் பிரதமர் ஜன்மான் திட்டத்தின் கீழ் பழங்குடியின கிராமத்திற்கு மின்சாரம் வழங்குவதாக மாவட்ட ஆட்சியர் ரோஹிதாஷ்வ சிங் தோமர் உத்தரவிட்டார். அதன்படி, இந்த கிராமத்திற்கு 100 சதவீத மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |