இந்தியாவின் அதிக கோடீஸ்வரர்கள் வசிக்கும் கிராமம்: எது தெரியுமா?
மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் ஹிவாரே பஜார் என்ற கிராமம் அமைந்துள்ளது.
இந்த கிராமத்தில் தான் அதிக எண்ணிக்கையிலான கோடீஸ்வரர்கள் வசிப்பதால் இந்த கிராமம் "கோடீஸ்வரர்களின் கிராமம்" என்று அழைக்கப்படுகிறது.
இந்த கிராமத்தில் வசிக்கும் 305 குடும்பங்களில் 80 பேர் கோடீஸ்வரர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், 50 குடும்பங்கள் ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் சம்பாதிக்கின்றனர். இந்த கிராம மக்களின் முதன்மையான வருமானம் விவசாயம்.
1980 மற்றும் 1990களில் கடுமையான வறட்சியின் காரணமாக இந்த கிராமம் ஒரு காலத்தில் வறுமையுடன் போராடியது.
1990ஆம் ஆண்டில் ஹிவாரே பஜாரில் உள்ள 90% குடும்பங்கள் ஏழைகளாக இருந்தனர்.
கிராம மக்கள் ஒன்றிணைந்து, 1990ல் "கூட்டு வன மேலாண்மை குழு" என்ற பெயரில் ஒரு குழுவை உருவாக்கினர்.
அந்தக் குழுவின் கீழ், வறட்சியை எதிர்த்து கிணறு தோண்டவும், மரங்கள் நடவும் தொடங்கினர். மேலும் தண்ணீர் தேவைப்படும் பயிர்களை விதைப்பதற்கு தடை விதித்தனர்.
ஹிவாரே பஜாரில் இப்போது 300க்கும் மேற்பட்ட கிணறுகள் இருக்கின்றது. இங்கு வசிக்கும் குடும்பங்கள் விவசாயத்தின் மூலம் மட்டுமே வருமானத்தை ஈட்டுகின்றனர்.
கிராமத்தின் தனிநபர் வருமானம், நாட்டின் முதல் 10 சதவீத கிராமப்புறப் பகுதிகளில் சராசரியாக மாத வருமானம் ரூ. 890ஐ விட இரண்டு மடங்கு அதிகம்.
2020 ஆண்டு நடைபெற்ற மனதின் குரல் நிகழ்ச்சியின் போது, பிரதமர் நரேந்திர மோடி, நீர் பாதுகாப்பில் கிராம வாசிகளின் உணர்திறனையும், தண்ணீரை வீணாக்குவதை தடுக்க பயிர் முறையில் மாற்றங்களை கொண்டு வந்ததையும் பாராட்டினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |