அனைத்து ஆண்களும் கட்டாயம் 2 திருமணங்களைச் செய்து கொள்ளும் இந்திய கிராமம் எங்குள்ளது?
இந்த கிராமத்தில் அனைத்து ஆண்களும் கட்டாயம் 2 திருமணங்களைச் செய்து கொள்ள வேண்டும்.
எந்த கிராமம்?
இந்திய மாநிலமான ராஜஸ்தான், ஜெய்சால்மரில் உள்ள ராம்தேயோ-கி-பஸ்தி கிராமத்தில் வினோத பழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த கிராமத்தில் மொத்தம் 600 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள அனைத்து ஆண்களும் கட்டாயம் இரண்டு திருமணங்களை செய்து கொள்வார்களாம்.
இதனை பல ஆண்டுகளாக கடைபிடித்து வருகின்றனர் என்றும் சொல்லப்படுகிறது. இதன் பின்னால் அதிர வைக்கும் காரணம் ஒன்றும் உள்ளது.
நமது நாட்டில் இந்து திருமண சட்டத்தின்படி பலதர மணம் என்பது தடை செய்யப்பட்ட ஒன்றாகவே இருந்து வருகிறது. ஆனால், இந்த கிராமத்தில் ஆண்கள் பல திருமணங்களை செய்கின்றனர்.
அதாவது, தன்னுடைய முதல் மனைவியால் எப்போதும் ஆண் குழந்தையைப் பெற்றெடுக்க முடியாது என்று கிராம மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
இந்த கிராமத்தில் உள்ள அனைத்து ஆண்களும் இந்த காரணத்தினால் தான் இரண்டாவது திருமணத்தை செய்து கொள்கின்றனர்.
ஆனால், இதற்கு தற்போதுவரை அதிகாரபூர்வமாக அறிவியல் காரணங்கள் இல்லை. மேலும், இரண்டாவது மனைவிக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லை என்றாலும் சிலருக்கு பெண் குழந்தைகளும் பிறக்கிறது.
இதனால், அங்கு பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் சொல்கின்றனர்.
தற்போது, இது குறித்து இளைய தலைமுறையினர் பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். இது பெண்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சமத்துவத்தைப் பறிப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |