கிரிக்கெட் வீரராக வேண்டும் என்று ஆசைப்பட்டவர்... தற்போது நாளுக்கு ரூ 5 கோடி சம்பளம்: யார் அந்த கோடீஸ்வரர்
தமிழ்நாட்டில் பிறந்து தற்போது கூகிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டுவரும் சுந்தர் பிச்சை தான், தமது இளம் வயதில் கிரிக்கெட் வீரராக வேண்டும் என ஆசைப்பட்டவர்.
கிரிக்கெட் வீரராக வேண்டும்
சுந்தர் பிச்சை சென்னை ஜவஹர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் பயின்றார், பின்னர் ஐஐடி காரக்பூரில் உலோகவியல் பொறியியலில் பட்டம் பெற்றார். அதன் பின்னர் மேற்படிப்புக்காக ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளிக்கும் சுந்தர் பிச்சை சென்றார்.
2004ல் இருந்தே கூகிள் நிறுவனத்தில் சுந்தர் பிச்சை பணியாற்றி வருகிறார். அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டுவரும் சுந்தர் பிச்சையின் தற்போதைய ஒரு நாள் சம்பளம் என்பது ரூ 5 கோடி என்றே கூறப்படுகிறது.
ஒரு நாள் சம்பளம் ரூ 5 கோடி
அதாவது 2022ல் சுந்தர் பிச்சை பெற்ற மொத்த சம்பளம் என்பது தோராயமாக ரூ 1,854 கோடி என்றே கூறப்படுகிறது. இதன் மூலம் அவரின் ஒரு நாள் சம்பளம் என்பது ரூ 5 கோடி என்று தெரியவந்துள்ளது.
கிரிக்கெட் மீது அதிக ஆர்வமும் ஈடுபட்டும் கொண்ட சுந்தர் பிச்சை, சிறு வயதில் தமது கனவு என்பது கிரிக்கெட் வீரராக வலம் வர வேண்டும் என்பதே என தெரிவித்துள்ளார்.
சென்னையில் பாடசாலை காலகட்டத்தில் பள்ளி கிரிக்கெட் அணியின் தலைவராகவும் இருந்துள்ளார். சுனில் கவாஸ்கர் மற்றும் சச்சின் டெண்டுல்கரின் தீவிர விசிறியான சுந்தர் பிச்சை, டி20 விளையாட்டை ரசிப்பதில்லை என கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |