கனடாவுக்கு இந்தியர் அனுப்ப முயன்ற பார்சலுக்குள் இருந்த அந்த பொருள்: அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
இந்தியர் ஒருவர் கனடாவுக்கு கூரியரில் அனுப்ப முயன்ற பார்சல் ஒன்றை ஸ்கேன் செய்த அலுவலர்கள், சந்தேகத்தின் பேரில் பொலிசாருக்கு தகவலளித்தனர்.
பார்சலுக்குள் இருந்த அந்த பொருள்
திங்கட்கிழமையன்று, பஞ்சாபைச் சேர்ந்த ஒருவர், கனடாவிலிருக்கும் ஒருவருக்கு பார்சல் ஒன்றை கூரியர் மூலமாக அனுப்பியுள்ளார்.
Tribune India
அந்த பார்சலை கூரியர் நிறுவன அலுவலர்கள் ஸ்கேன் செய்தபோது, அதற்குள் சந்தேகத்துக்குரிய பொருள் ஒன்று இருப்பது தெரியவரவே, அவர்கள் போதைத்தடுப்பு பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர்.
அதிகாரிகள் முன்னிலையில் அந்த பார்சல் பிரிக்கப்பட, அந்த பார்சலுக்குள், சத்து மாவுக்குள் ஒரு சிறிய பாக்கெட்டில் போதைப்பொருள் ஒன்று மறைத்துவைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
அந்த பார்சலை பஞ்சாபைச் சேர்ந்த Sukhvinder Singh என்பவர், கனடாவில் வாழும் Varinder Singh என்பவருக்கு அனுப்பியுள்ளார்.
பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |