Indian Wells Tennis: அரையிறுதிக்கு முன்னேறிய இகா ஸ்வியாடெக், கோகோ காப்
இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அரையிறுதியில் இகா ஸ்வியாடெக், கோகோ காப் முன்னேறினர்.
Indian Wells Tennis
அமெரிக்காவில் இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் மற்றும் டென்மாரிக்கின் கரோலின் வோஸ்னியாக்கி மோதினர்.
அதில் முதல் செட்டை 6-4 என்று போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் கைப்பற்றினார். பின்னர் இரண்டாவது செட்டில் 1-0 என ஸ்வியாடெக் முன்னிலையில் இருந்தார்.
அப்போது காயம் காரணமாக கரோலின் வோஸ்னியாக்கி வெளியேறினார். இதனால், வீராங்கனை இகா ஸ்வியாடெக் (Iga Swiatek) அரையிறுதிக்கு முன்னேறினார்.
அதேபோல இன்று நடைபெற்ற மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ காப் மற்றும் சீனாவின் யுவான் யுஇ உடன் மோதினர். இந்த ஆட்டத்தில் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் யுவான் யுஇ-யை வீழ்த்தி கோகோ காப் (Coco Gauff) அரையிறுதிக்கு முன்னேறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |