உலகின் மிகப்பெரிய பணக்காரரின் பணத்தை நிர்வகிக்கும் இந்தியர்: சம்பளம் ரூ 1100 கோடி
உலகின் பெரும் கோடீஸ்வரரான எலோன் மஸ்க் சமீபத்தில் தொடங்கிய புதிய அரசியல் முயற்சியான அமெரிக்க கட்சியின் பொருளாளராக டெல்லியில் பிறந்த வைபவ் தனேஜா நியமிக்கப்பட்டார்.
ரூ 1157 கோடி சம்பளம்
டெஸ்லா நிறுவனத்திற்குள் முக்கிய நிதிப் பதவிகளை வகித்த பிறகு ஆகஸ்ட் 2023 இல் டெஸ்லாவின் தலைமை நிதி அதிகாரியாக (CFO) பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 2017ல் டெஸ்லாவில் உதவி நிறுவனக் கட்டுப்பாட்டாளராகச் சேர்ந்ததிலிருந்து, தலைமைக் கணக்கியல் அதிகாரியாக அவர் விரைவாகப் பதவிகளில் உயர்ந்தார்.
2024ல் அனைத்து சலுகைகள் உட்பட மொத்தமாக ரூ 1157 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார். அவரது அடிப்படை ஊதியம் 400,000 அமெரிக்க டொலர் என்றே கூறப்படுகிறது.
டெல்லி பல்கலைக்கழகம்
டெஸ்லாவில் இணையும் முன்னர் SolarCity என்ற நிறுவனத்தில் பல ஆண்டுகள் வைபவ் தனேஜா பணியாற்றியுள்ளார். ஆனால் குறித்த நிறுவனத்தை 2016ல் டெஸ்லாவே வாங்கியது.
1999ல் முதல் முறையாக PricewaterhouseCoopers என்ற நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அந்த நிறுவனத்தில் நீண்ட 17 ஆண்டுகள் அவர் பணியாற்றியுள்ளார். தனேஜா டெல்லி பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பட்டம் பெற்றுள்ளார். 1997 முதல் 2000 வரையில் ICAI கல்வி மையத்தில் பட்டய கணக்காளராக பயிற்சி பெற்றுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |