கிட்டத்தட்ட ரூ 2 கோடி சம்பளம்... நியூயார்க்கில் வசிக்கும் இந்தியப் பெண்: யாரிந்த இன்ஸ்டா பிரபலம்
கூகிள் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றும் இந்தியப் பெண் ஒருவர், அவரது மாதச் செலவுகள் குறித்து பதிவிட்டு கவனம் ஈர்த்துள்ளார்.
சராசரி சம்பளம்
கூகிள் நிறுவனத்தில் பணியாற்றும் மைத்ரி மங்கள் என்பவரே, நியூயார்க் நகரில் தமது மாதச் செலவுகள் தொடர்பில் சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 5,000 டொலர் செலவிட நேர்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நியூயார்க் நகரில் பணிபுரியும் ஒரு மென்பொருள் பொறியாளரின் சராசரி சம்பளத்தையும் பகிர்ந்து கொண்டார்.
ஆண்டுக்கு கிட்டத்தட்ட ரூ 2 கோடி வரையில் மென்பொருள் பொறியாளர் ஒருவர் சம்பாதிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார். நியூயார்க் நகரில் மாத வாடகை மட்டும் 3,000 டொலர் எனவும், அன்றாடம் சின்னச் சின்னத் தேவைகள் என மாதம் 2,000 டொலர் செலவாகும் என்றும்,
போக்குவரத்திற்கு என மாதம் 100 முதல் 200 டொலர் வரையில் செலவாகும் எனவும், இதனால் மாதம் கிட்டத்தட்ட 5,000 டொலர் செலவாவதாக மைத்ரி மங்கள் குறிப்பிட்டுள்ளார்.
அவர் நியூயார்க்கின் பிங்காம்டன் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். நவம்பர் 2022 முதல் கூகிளில் பணிபுரிந்து வருகிறார்.
இதற்கு முன்பு, அவர் ப்ளூம்பெர்க்கில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றியுள்ளார். இன்ஸ்டா பக்கத்தில் மட்டுமின்றி யூடியூப் காணொளிகளையும் மங்கள் பதிவேற்றி வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |