ஐந்து ஆண்டுகளுக்கு முன் அன்புத் தந்தையை இழந்த இந்தியப் பெண்... இன்றுவரை விடை கிடைக்காத கேள்விகள்
ஐந்து ஆண்டுகளுக்கு முன் தன் தந்தையை இழந்துள்ளார் கனடாவில் வாழும் இந்தியப் பெண் ஒருவர்.
இன்று வரை அவரது தந்தையின் மரணத்துக்கான காரணம் தெரியவரவில்லை.
கனடாவின் மொன்றியலில் வாழும் சோனாலி, CBC ஊடகத்தில் பணியாற்றி வருகிறார்.
குழந்தையாக இருக்கும்போதும் சரி, தான் திருமண மேடைக்குச் செல்லும்போதும் சரி, தன் தந்தையின் கையைப் பற்றியிருக்கும் சோனாலியின் புகைப்படங்களைப் பார்க்கும்போது, அவருக்கும் அவருடைய தந்தைக்கும் இருக்கும் நெருக்கத்தை மிகத் தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது.
ஆனால், அந்த நெருக்கத்துக்கு திடீரென ஒரு நாள் பிரச்சினை வந்தது.
Submitted by Sonali Karnick
ஆம், ஒருநாள் திடீரென சோனாலியின் தந்தை ரமேஷுக்கு பக்கவாதம் தாக்கியது.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ரமேஷ் ஏழு வாரங்கள் தீவிர சிகிச்சைப்பிரிவில் வைக்கப்பட்டிருந்தபோது, அவர் எப்படியும் வீட்டுக்குத் திரும்பிவிடுவார் என்ற நம்பிக்கையை மட்டும் சோனாலியோ, அவரது தாயாகிய சந்தியாவோ இழக்கவில்லை.
ஆனால், அவர்களுடைய நம்பிக்கை பலிக்கவில்லை...
Submitted by Sonali Karnick
ஆம், ஒரு நாள், சோனாலியின் தந்தையின் இதயம் துடிப்பதை நிறுத்திக்கொண்டது.
2017ஆம் ஆண்டு, தங்கள் 45ஆவது திருமண நாளின்போது திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட ரமேஷ், வீடு திரும்பாமலே இந்த உலகத்தை விட்டுச் சென்றுவிட்ட விடயம் ஏற்படுத்திய வலியை அந்தக் குடும்பத்தால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை.
விடயம் என்னவென்றால், சோனாலி குடும்பத்தின் கவலை அன்றுடன் முடியவில்லை.
Submitted by Sonali Karnick
அதாவது, ரமேஷ் எதனால் உயிரிழந்தார் என்பதை இன்று வரை யாரும் சோனாலிக்கோ, அவரது தாய்க்கோ தெரிவிக்கவில்லை.
சோனாலியின் தந்தையின் மூளையிலிருந்து மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அந்த ஆய்வில் ரமேஷ் எதனால் உயிரிழந்தார் என்பதைக் கண்டுபிடிக்கமுடியவில்லையாம்.
Submitted by Sonali Karnick
இரண்டாவது முறை மீண்டும் ரமேஷின் உடலிலிருந்து செல்கள் எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. நீண்ட காத்திருப்பு, படிவங்கள் பூர்த்தி செய்தல் என பல்வேறு நடைமுறைகளுக்குப் பிறகு வந்து சேர்ந்த அந்த ஆய்வின் முடிவுகளும் அவரது மரணத்திற்கான காரணத்தை விளக்கவில்லை.
ஆக, தந்தை இறந்த துக்கம் ஒருபுறம் இருக்க, அவர் மரணமடைந்ததற்கான காரணம் இன்னமும் தெரியாமல் தவிக்கிறார்கள், சோனாலியும் குடும்பத்தாரும்.
Submitted by Sonali Karnick