இங்கிலாந்தில் கொல்லப்பட்ட இளம்பெண்: பொலிசார் வெளியிட்டுள்ள தகவல்
woman, 26, shot dead in Hounslow named by police: இங்கிலாந்தில் சென்ற வாரம் சுட்டுக்கொல்லப்பட்ட இளம்பெண் தொடர்பில் புதிய தகவல்கள் சிலவற்றை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை, அதாவது, நவம்பர் மாதம் 4ஆம் திகதி, Hounslowஇலுள்ள வீடொன்றிற்கு பொலிசார் அழைக்கப்பட்டனர்.
அப்போது அந்த வீட்டில் இளம்பெண்ணொருவர் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
புதிய தகவல்கள்
இந்நிலையில், அவரது பெயர் நவ்நீத் கௌர் (26) என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அவர் துப்பாக்கிக் குண்டு காயங்களால் பலியானதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கௌர் கொல்லப்பட்ட விடயம் தொடர்பில் ரஜத் ஜஸ்வால் (31) என்னும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது கொலை மற்றும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் ஆயுதம் வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஜஸ்வால் இன்று Hendon மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.