பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட இருக்கும் இந்தியப் பெண்: சமூக ஊடகங்களில் வைரலாகிவரும் செய்தி
இங்கிலாந்தில், சமூக ஊடகங்களில் ’We Are All Gurmit Kaur’ என்னும் விடயம் வைரலாகிவருகிறது. அதன் பின்னணியில் ஒரு இந்தியப் பெண்ணின் நாடுகடத்தல் விவகாரம் உள்ளது.
நாடுகடத்தப்பட இருக்கும் இந்தியப் பெண்
2009ஆம் ஆண்டு, இங்கிலாந்திலுள்ள Smethwick என்னுமிடத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக பிரித்தானியாவுக்கு வந்தார் குர்மீத் கௌர் (78) என்னும் இந்தியப் பெண்.
WE ARE ALL GURMIT KAUR CAMPAIGN
இன்று, அவரைக் குறித்த ’We Are All Gurmit Kaur’ என்னும் விடயம் சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது. விடயம் என்னவென்றால், இந்தியாவுக்குத் திரும்பிச் செல்ல பணம் இல்லாததால் ஆரம்பத்தில் தன் மகனுடன் குர்மீத் தங்கியிருந்த நிலையில், அவரது கணவர் இறந்துபோக, மகனும் அவரைப் பிரிய, சீக்கிய சமுதாயத்தினர் வீடுகளில் மாறி மாறி வசித்து வருகிறார் அவர்.
அவர் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லவேண்டும், அல்லது நாடுகடத்தப்படுவார் என உள்துறை அலுவகம் கூறியிருந்தது.
பெருகிவரும் ஆதரவு
குர்மீத் பிரித்தானியாவில் நிரந்தரமாக தங்கியிருக்கும் வகையில் அனுமதிக்கக் கோரி, அவர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட, அது உள்துறை அலுவலகத்தால் நிராகரிக்கப்பட்டது.
ஆனால், குர்மீத்தை நாடுகடத்தக்கூடாது என்று கூறி, ஒன்லைனில் மனு ஒன்று உருவாக்கப்பட, குர்மீத்துக்கு ஆதரவாக 65,000 பேர் மனுவில் கையெழுத்திட்டுள்ளார்கள்.
WE ARE ALL GURMIT KAUR CAMPAIGN
விடயம் என்னவென்றால், தனக்கு இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும் நிலையிலும், உணவு வங்கிகளில் தன்னார்வலராக உதவிகள் செய்து வருகிறார் குர்மீத். ஆகவே, அவரை ஆண்டி என அன்புடன் அழைக்கும் சீக்கிய சமுதாயத்தினர், அவர் பிரித்தானியாவில் தங்கியிருக்க அனுமதிக்க கோரி வருகிறார்கள்.
MIGRANT VOICE
அதற்காகவே, குர்மீத்துக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் ’We Are All Gurmit Kaur’ என்னும் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது, அது வைரலாகியும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |