சுந்தர் பிச்சை, சத்யா நாதெல்லாவை விடவும் பெரும் கோடீஸ்வரியாக அறியப்படும் இந்தியப் பெண்மணி
அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியில் அமைந்துள்ள அரிஸ்டா நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியான ஜெயஸ்ரீ உல்லால் என்பவரே சுந்தர் பிச்சை மற்றும் சத்யா நாதெல்லாவை விடவும் பெரும் கோடீஸ்வரியாக அறியப்படுகிறார்.
2008ல் அரிஸ்டா நெட்வொர்க்ஸ்
தற்போது 63 வயதாகும் ஜெயஸ்ரீ உல்லால் லண்டனில் பிறந்திருந்தாலும், பாடசாலை கல்வியை டெல்லியில் முடித்துள்ளார். இவரது பெற்றோர் டெல்லியை பிறப்பிடமாக கொண்டவர்கள்.
Santa Clara பல்கலைக்கழகம் மற்றும் San Francisco State பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பட்டப்படிப்பை முடித்த ஜெயஸ்ரீ உல்லால் 2008ல் அரிஸ்டா நெட்வொர்க்ஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
2014ல் பொதுத்துறை நிறுவனமாக அரிஸ்டா நெட்வொர்க்ஸ் மாறியது. தமது கடின உழைப்பால் தற்போது தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் அந்த நிறுவனத்தில் செயல்பட்டு வருகிறார்.
இந்த நிறுவனத்தில் உல்லாலுக்கு 2.4 சதவிகித பங்குகள் சொந்தமாக உள்ளது. இதில் குறிப்பிட்ட எண்ணிக்கை பங்குகளை தமது இரு பிள்ளைகளுக்கும் உறவினர்கள் இருவருக்கும் பகிர்ந்து அளித்துள்ளார்.
இருவரின் சொத்து மதிப்பை விடவும்
ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில், ஜெயஸ்ரீ உல்லாலின் மொத்த சொத்து மதிப்பு 3.4 பில்லியன் அமெரிக்க டொலராகும், அதாவது இந்திய மதிப்பில் ரூ 28,000 கோடி என்றே கூறப்படுகிறது.
இது மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா மற்றும் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை ஆகிய இருவரின் சொத்து மதிப்பை விடவும் மிக அதிகம் என்றே கூறப்படுகிறது.
2008ல் அரிஸ்டா நெட்வொர்க்ஸ் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்புக்கு வந்த உல்லால், 2014ல் அந்த நிறுவனத்தை பொதுத்துறை நிறுவனமாக மாற்றினார். சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமது துறையில் சிறந்து விளங்கி வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |