வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்?
லட்சக்கணக்கான மக்கள் தங்கள் நாளைத் தொடங்கும்போது கார்கள், பேருந்துகள், டாக்சிகள் என பல்வேறு போக்குவரத்து வசதிகள் மூலம் வேலைக்குச் சென்று, சரியான நேரத்தில் வீட்டிற்கும் வருவார்கள்.
இரண்டு குழந்தைகளுக்குத் தாயான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண், விமான நிலையங்கள், பாதுகாப்பு சோதனைகள் மற்றும் விரிவான விமானப் பயணம் உள்ளிட்ட சாதாரணமில்லாத பயணத்தை மேற்கொள்கிறார்.
இந்தப் பெண்ணின் பயணம் மிகவும் கடினமானதாகும். பல்வேறு மாநிலங்களைச் சுற்றி, அவர் வாரத்தில் ஐந்து நாட்கள் வேலைக்குச் செல்ல வேண்டியிருக்கிறது.
வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் பெண்
AirAsia-இன் நிதி செயல்பாட்டுத் துறையின் உதவி மேலாளரான ரேச்சல் கவுர், ஒரு நேர்காணலில் ஒவ்வொரு வாரமும் விமானத்தில் வேலைக்குச் செல்வதாக கூறியுள்ளார்.
விமானங்கள் மிகவும் மலிவு விலையில் இருப்பதாகவும், தனது குழந்தைகளுடன் வீட்டில் கூடுதல் நேரத்தை செலவிட முடிகிறது எனவும் கூறியுள்ளார்.
“எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர், இருவரும் வளர்ந்து வருகின்றனர்... அவர்கள் வளர்ந்து வருவதால், தாய் அடிக்கடி அருகில் இருக்க வேண்டிய அவசியம் இருப்பதாக உணர்கிறேன். மேலும், இந்த ஏற்பாட்டின் மூலம் நான் ஒவ்வொரு நாளும் வீட்டிற்குச் சென்று இரவில் அவர்களைப் பார்க்க முடிகிறது, ” என்று அவர் கூறியுள்ளார்.
அந்தப் பெண் தனது நாளை அதிகாலை 4.00 மணிக்குத் தொடங்கி, 5.55 மணிக்கு விமானத்தில் ஏறுவதற்காக 5.00 மணிக்கு விமான நிலையத்திற்குப் புறப்படுகிறார். காலை 7.45 மணியளவில் தனது அலுவலகத்திற்கு சென்று இரவு 8.00 மணிக்கு வீடு திரும்புகிறார்.
ஏன் தினமும் விமானப் பயணம் செய்கிறார்?
உணவு மற்றும் பிற செலவுகள் உட்பட தனது பயண வழக்கம், தனது பணியிடத்திற்கு அருகில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுப்பதை விட கணிசமாக மலிவானது என்று கவுர் குறிப்பிட்டார்.
கவுர் முன்பு கோலாலம்பூரில் தனது அலுவலகத்திற்கு அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே பினாங்குக்குத் திரும்பினார், அங்கு அவர் வசித்து வந்தார்.
2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அவர் தினமும் விமானப் பயணத்தைத் தொடங்க முடிவு செய்தார், இது அவரது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கைக்கு இடையில் சரியான சமநிலையை உருவாக்க அனுமதித்ததாக அவர் கூறினார்.
அவரது புதிய பயண வழக்கத்தால் பணத்தை மிச்சப்படுத்தவும் முடிந்தது எனவும் கூறியுள்ளார். முன்னதாக தனது மாதச் செலவுகள் மொத்தம் $474 (தோராயமாக ரூ.42,000) ஆக இருந்ததாகவும், இப்போது $316 (சுமார் ரூ.28,000) ஆகக் குறைந்துள்ளதாகவும் கவுர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |