அமெரிக்காவில் நண்பரை காப்பற்ற முயன்ற இந்திய இளம்பெண் ரயில் மோதி உயிரிழப்பு
indian origin women dies in newyork hit by train while save friend fell in track: நியூயார்க்கில் தண்டவாளத்தில் சிக்கிய ஆண் நண்பரை காப்பற்ற முயன்ற இந்திய இளம்பெண் ரயில் மோதி உயிரிழந்துள்ளனர்.
நண்பரை காப்பற்ற முயன்ற பெண் ரயில் மோதி உயிரிழப்பு
இந்திய வம்சாவளியை சேர்ந்த மலாய்கா சித்ரே மற்றும் நேபாள பூர்விகத்தை கொண்ட நவம் கவுல் ஆகிய இருவரும் அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று அங்கு பணியாற்றி வந்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு 3 மணியளவில் நியூயார்க்கின் மன்ஹாட்டன் சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் ரயிலுக்காக இருவரும் காத்திருந்துள்ளனர்.
அப்போது ரயில் வரும் நேரத்தில் நவம் கவுல் தண்டவாளத்தில் விழுந்த நிலையில், அவரை காப்பாற்ற மலாய்கா சித்ரேவும் தண்டவாளத்தில் இறங்கியுள்ளார்.
அவர்கள் இருவரையும் தண்டவாளத்தில் பார்த்தாலும் அருகே வந்துவிட்டதால் ரயில் ஓட்டுநரால் ரயிலை உடனடியாக நிறுத்த முடியவில்லை.
ரயில் மோதியதில், இருவரும் ரயிலுக்கு அடியில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இருவரின் உடலையும் மீட்டுள்ள நியூயார்க் காவல்துறைத் துறையினர் இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
நியூ ஜெர்சியில் அருகில் உள்ள நகரங்களில் வசித்து வந்த இருவரும், 2024 ஆம் ஆண்டில் ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருந்தனர்.
மலாய்கா சித்ரே, அகாடியா பார்மசூட்டிகல்ஸ் நிறுவனத்தில் தரச் செயல்பாட்டு நிபுணராகப் பணிபுரிந்துகொண்டே, டெம்பிள் பல்கலைக்கழகத்தில் மருந்தியல் படிப்பில் முனைவர் பட்டம் படித்து வந்தார்.
வணிகப் பட்டம் பெற்றிருந்த நவம் கவுல், ப்ளூம்பெர்க் நிறுவனத்தில் தரவு ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ளார்.