கனடாவில் இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்: கணவர் கைது
கனடாவில், இந்திய இளம்பெண்ணொருவர் கொல்லப்பட்ட நிலையில், அவரது கணவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிசாருக்கு வந்த அழைப்பு
இம்மாதம், அதாவது, ஜூலை மாதம் 9ஆம் திகதி மாலை 6.44 மணியளவில், கனடாவின் ஆல்பர்ட்டா மாகாண தலைநகரான எட்மண்டனிலுள்ள சில்வர் பெர்ரி என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடொன்று தொடர்பில் பொலிசாருக்கு அழைப்பொன்று வந்துள்ளது.

இளம்பெண்ணொருவர் அசைவின்றிக் கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அங்கு விரைந்த பொலிசார், படுகாயமடைந்த நிலையில் சுயநினைவிழந்து கிடந்த தமன்பிரீத் கௌர் (23) என்னும் இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி கௌர் 12ஆம் திகதி உயிரிழந்துவிட்டார். கௌர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
இந்நிலையில், கௌரின் கணவரான ரித்திஷ் குமார் (22) என்பவரை, புதன்கிழமையன்று, அதாவது, ஜூலை மாதம் 22ஆம் திகதி, பொலிசார் கைது செய்துள்ளனர்.
கௌர் கழுத்து நெறிக்கப்பட்டதால் உயிரிழந்ததாக உடற்கூறு ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ள நிலையில், ரித்திஷ் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |