ஐந்து நிமிடங்கள் குளித்த பெண்ணுக்கு 1.20 லட்ச ரூபாய் அபராதம்
Indian woman in Australia fined RS.1.20 lakh after 5 minute shower triggers fire alarm: அவுஸ்திரேலியாவில் இந்திய இளம்பெண்ணொருவர் சுடுதண்ணீரில் குளித்ததைத் தொடர்ந்து தீ எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் அவருக்கு 1.20 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் வாமிகா என்னும் இந்திய இளம்பெண் குளித்து முடித்து குளியலறையிலிருந்து வெளியேறும்போது திடீரென தீ எச்சரிக்கை அலாரம் ஒலித்துள்ளது.
ஐந்து நிமிடங்கள் குளித்த பெண்ணுக்கு 1.20 லட்ச ரூபாய் அபராதம்
வாமிகா வசித்துவரும் குடியிருப்பின் மேலாளர் வந்து கதவைத் தட்ட, வெளியே தீயணைப்புத்துறையினர் ஏதோ ஒத்திகையில் ஈடுபட்டுள்ளதாகவும், மேலாளர் தன்னை பாதுகாப்பாக வீட்டிலிருந்து வெளியேற்ற வந்துள்ளதாகவும் எண்ணியுள்ளார் அவர்.

ஆனால், பிரச்சினையே அவரது வீட்டில்தான் என அவருக்குத் தெரியவந்துள்ளது. அதாவது, வாமிகா தன் குளியலறையிலுள்ள exhaust ஃபேனை ஆன் செய்யாமலே சுடுதண்ணீரில் குளித்துள்ளார்.
ஐந்து நிமிடக் குளியலுக்குப் பின் அவர் குளியலறையிலிருந்து வெளியேற, குளியலறையிலிருந்து வெளியேறிய நீராவி, அருகிலிருந்த தீ எச்சரிக்கை அலாரத்தை தூண்ட, அலாரம் ஒலிக்கத் துவங்கியுள்ளது.
சிறிது நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் அங்கு குவிந்துள்ளனர்.
பின்னர் வாமிகா சுடுதண்ணீரில் குளித்ததால் ஏற்பட்ட நீராவியே தீ எச்சரிக்கை அலாரம் ஒலிக்கக் காரணம் என தெரியவரவே, தங்களை வரவழைத்ததற்காக 1,800 டொலர்கள் கட்டச் சொல்லியிருக்கிறார்கள் தீயணைப்புத்துறையினர்!
1,800 அவுஸ்திரேலிய டொலர்கள் என்பது இந்திய மதிப்பில் 1,23,085.17 ரூபாய் ஆகும்.
ஐந்து நிமிடம் குளித்ததற்கு 1.20 லட்ச ரூபாய் அபராதமா என வேடிக்கையாகக் கேட்கும் வாமிகா, அது குறித்த இடுகை ஒன்றை சமூக ஊடகம் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
அதை பார்வையிட்ட பலரும், இது அநியாயம், யாராவது குளியலறைக்கு அருகில் தீ எச்சரிக்கை அலாரத்தை பொருத்துவார்களா என்று கேள்வி எழுப்ப, சிலர், முதல் முறை நிகழ்ந்த தவறுக்கே அபராதமா என்னும் ரீதியில் கருத்து தெரிவித்துவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |