முகத்தில் மிளகாய்ப்பொடி தூவப்பட்டு இறந்து கிடந்த இந்திய வம்சாவளி இளம்பெண்... கமெராவில் சிக்கிய காட்சியால் அம்பலமான கணவனின் நாடகம்
முகத்தில் மிளகாய்ப்பொடி தூவப்பட்டு இறந்துகிடந்த இளம்பெண் ஒருவர் கொள்ளையர்களால் கொல்லப்பட்டதாக கருதப்பட்ட நிலையில், CCTV கமெராவால் கணவன் நடத்திய நாடகம் தெரியவந்தது.
Wolverhamptonஇல் வசிக்கும் Gurpreet Singh (43), பள்ளிக்கு சென்றிருந்த பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வேலையிலிருந்து வீடு திரும்பிய நிலையில், அவரது மனைவி Sarbjit Kaur (38) தரையில் விழுந்து கிடப்பதைக் கண்டு பிள்ளைகள் அலறி சத்தமிட, உடனே பொலிசாரை அழைத்தார்.
பொலிசார், வீடு இருந்த நிலையைக் கண்டு வீட்டில் கொள்ளையர்கள் புகுந்திருக்கலாம் என கருதி கொள்ளையர்களை தேடும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இதற்கிடையில், Gurpreet வீட்டிலுள்ள CCTV கமெராக்கள் எதுவும் வேலை செய்யாததால், அக்கம் பக்கத்து வீடுகளிலுள்ள கமெராக்களை பொலிசார் ஆய்வு செய்துள்ளனர்.
அதில், முக்கிய ஆதாரம் ஒன்று சிக்க, வழக்கே திசைமாறியது. Sarbjit Kaur இறந்த அன்று காலை, பர்தா அணிந்த ஒரு பெண் வீட்டுக்குள் வருவதையும், சிறிது நேரத்திற்குப் பின் அவரும், Gurpreetம் வீட்டிலிருந்து வெளியேறுவதையும் காணமுடிந்தது.
ஆகவே பொலிசாரின் சந்தேகம் Gurpreet மீது திரும்பியுள்ளது. வீட்டில் எந்த பொருட்களும் திருட்டு போகவில்லை என்பதையும், அந்த வீட்டின் கதவை மின்னணு முறையில் மட்டுமே திறக்கமுடியும் என்பதையும் கருத்தில் கொண்ட பொலிசார் Gurpreetஐ கைது செய்தனர்.
அந்த பர்தா அணிந்த பெண் இதுவரை சிக்கவில்லை. அவர் Gurpreetஉடன் முறைதவறிய உறவு வைத்திருக்கும் ஒரு பெண்ணாக இருக்கலாம் என்றும், இருவருமாக சேர்ந்து Sarbjit Kaurஐ கொலை செய்திருக்கலாம் என்றும் பொலிசார் கருதுகின்றனர்.
நேற்று Gurpreet சிறையிலடைக்கப்பட்டார், அவர் குறைந்தது 19 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்கும் வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


