ஜிம்பாப்வே அணியை துவம்சம் செய்த இந்தியா: 8.5 ஓவர்களில் அதிரடியான வெற்றி
Indian Women won by 9 wickets against Zimbabwe Women: ஜிம்பாப்வே மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இலக்கை நிர்ணயித்த ஜிம்பாப்வே
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே மகளிர் கிரிக்கெட் அணி சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூரில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை எதிர்கொண்டது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாங்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 102 ஓட்டங்கள் குவித்தது.
இந்திய அணி அபார வெற்றி
103 ஓட்டங்கள் குவித்த வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடியது.
8.5 ஓவர்கள் முடிவிலேயே நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ஷஃபாலி வர்மா 55 ஓட்டங்களையும், மந்தனா 47 ஓட்டங்களையும் குவித்து அசத்தினர்.
மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த நிலையில், தற்போது இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.