வெளிநாட்டில் இரவு நேரத்தில் உயிரிழந்த 23 வயது இந்திய பெண்! வெளியான புகைப்படம்
அமெரிக்காவில் சாலை விபத்தில் சிக்கிய இந்திய இளம்பெண் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்த இளம்பெண்
Seattle பொலிசார் வெளியிட்ட தகவலின்படி, 23 வயதான ஜான்வி கந்துலா என்ற பெண் திங்கள்கிழமை இரவு பொலிஸ் ரோந்து வாகனத்தில் சிக்கி உயிரிழந்திருக்கிறார். சாலையில் நடந்து சென்ற போதே ஜான்வி விபத்தில் சிக்கியிருக்கிறார்.
விபத்துக்கு காரணமான அதிகாரி யார் என்ற விவரத்தை பொலிசார் வெளியிடவில்லை. சம்பவம் பற்றிய விசாரணையை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு தொடங்கியுள்ளது.
Seattle :
— Telugu360 (@Telugu360) January 25, 2023
23 year old Telugu Woman Jaahnavi Kandula struck by a Seattle police patrol vehicle has died. This unfortunate incident happened on Monday Night.
She's from Adoni ( Kurnool ).
May her soul rest in peace ! ? pic.twitter.com/7JM67dwbGa
மருத்துவமனைக்கு...
திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு டெக்ஸ்டர் அவென்யூ மற்றும் தாமஸ் தெருவில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. அங்கு ஜான்வி பலத்த காயங்களுடன் காணப்பட்ட நிலையில் CPR செய்யப்பட்டது.
பின்னர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்திருக்கிறார்.