கனடாவில் இந்திய இளைஞர் சாலை விபத்தில் மரணம்
கனடாவில் சாலை விபத்தில் இந்திய இளைஞர் உயிரிழந்தார்.
கனடாவில் அவர், மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்துவந்த நிலையில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில், மோகா மாவட்டத்தில் உள்ள கோலியா குர்த் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவின் கோல்டன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சாலை விபத்தில் உயிரிழந்தார்.
ஜக்சிர் சிங் கில் (Jagsir Singh Gill) எனும் 28 வயது இந்திய இளைஞர் கனடாவில் டிரக்-டிரெய்லர் சாரதியாக வேலை பார்த்து வந்தார். அவர், கனடாவின் ஆல்பர்ட்டா மாநிலத்தில் Calgary நகரத்தில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
tribuneindia
அவர், ஞாயிற்றுக்கிழமை தேசிய நெடுஞ்சாலை 1ல் சென்றுகொண்டிருக்கும்போது, விலங்குகளை ஏற்றிச் சென்ற மற்றோரு லொறி, முந்திச் செல்லும்போது, அவரது டிரக் மீது மோதியது. இதனால், ஜக்சிர் சிங் டிரக் கவிழ்ந்து, இரு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன.
ஜக்சிர் சிங் கில்லின் உடல் பாதி எரிந்த நிலையில், அவர் சிறிது நேரத்தில் தீக்காயங்களால் உயிரிழந்தார் என அவரது தந்தை குல்வந்த் சிங் தெரிவித்துள்ளார்.
மற்றொரு லாரியின் ஓட்டுநரும் உடல் கருகி இறந்தார். அவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
இந்த விபத்தைத் தொடர்ந்து கனடா டிரான்ஸ் நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.
tribuneindia.