ரூ.6.5 கோடி பேஸ்புக் வேலையை ராஜினாமா செய்த இந்திய இளைஞர்: பின்னணியில் இருக்கும் காரணம்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்திய இளைஞர் ஒருவர் ரூ.6.5 கோடிக்கும் மேல் சம்பளம் பெறும் மெட்டா வேலையை ராஜினாமா செய்துள்ளார்.
யார் இந்த இளைஞர்?
இந்திய வம்சாவளியை சேர்ந்த என்ஜினீயர் ராகுல் பாண்டே என்பவர் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவில் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் மற்றும் மேலாளராக பணிபுரிந்தார்.
ஆனால், இவர் கடந்த 2022 -ம் ஆண்டு ரூ.6.5 கோடிக்கு மேல் சம்பளம் பெறக்கூடிய மெட்டாவின் வேலையை ராஜினாமா செய்தார். இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏன் ராஜினாமா
ராகுல் பாண்டே தனது ராஜினாமா குறித்து ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "நான் பேஸ்புக்கில் வேலைக்கு சேர்ந்த முதல் 6 மாதத்திற்கு மிகவும் கவலையாக இருந்தேன். உடனே, 100 டொலர் நோட்டுகளை எண்ணும் அளவிற்கு என்னுடைய வேலை சீராக இல்லை.
நிறுவனத்தின் கலாச்சாரம் மற்றும் பணிக்கு ஏற்ற மாதிரி மாறுவதற்கு மிகவும் சிரமப்பட்டேன். மேலும், நான் மூத்த பொறியாளாராக இருப்பதற்கான தகுதி இருக்கிறதா என்ற சந்தேகமும் எனக்குள் எழுந்தது.
நான் பணிக்கு சேர்ந்த ஒரு வருடத்திற்கும் பேஸ்புக் சில உள்விவகாரங்களால் போராட்டங்களை சந்தித்து, அதனுடைய பங்குமதிப்பில் பெரிய சரிவு ஏற்பட்டது.
பதவி உயர்வு
இந்த பிரச்னை காரணமாக என்னுடன் பணிபுரிந்த சக ஊழியர்கள் வேறு நிறுவனத்திற்கு மாறினர். அதனால், என்னுடைய பல திட்டங்கள் தாமதம் ஆகின. வேறு நிறுவனத்திற்கு மாறிவிடலாம் என்ற எண்ணமும் எனக்குள் எழுந்தது.
ஆனால், நான் என்னுடைய செயல்திறனை மேம்படுத்துவற்காக ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொண்டேன். பின்பு, பணிபுரிந்த இரண்டு ஆண்டுகளில் எஞ்சினியர்களால் பரவலாக பயன்படுத்தும் கருவியை கண்டுபிடித்தேன்.
அதன் மூலம் பதவி உயர்வு பெற்று, அடிப்படை சம்பளமாக ரூ.2 கோடி பெற்றேன். இதன் பிறகு, பேஸ்புக்கில் பணியாற்றிய கடைசி ஆண்டில் நான் மேலாளராக பணியாற்றினேன். மொத்தம் மூன்று குழுவிற்கு மாறினேன்.
தொழில்நுட்பத்துறை
2021 -ம் ஆண்டுக்கு பிறகு மெட்டாவை தாண்டி உலகத்தையும் ஆராய ஆரம்பித்தேன். இதனைத்தொடர்ந்து தொழில்நுட்பத்துறையில் 10 ஆண்டுகள் பணியாற்றி செல்வ செழிப்பு அடைந்தேன்.
2021 -ல் எனது மொத்த இழப்பீடு 8 லட்சம் அமெரிக்க டொலரை (ரூ.6.5 கோடிக்கு மேல் ) தாண்டியது. இதனால் மெட்டாவின் பங்கு மதிப்பு உயர்ந்தது. அதிக வருமானம் ஈட்டும் நபர்களில் 1 சதவீத்தில் நானும் ஒருவனாக இருந்தேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |