இந்தியர்கள் கிரெடிட் கார்டு மூலம் வாங்கும் கடனின் அளவு உச்சம்!
இந்திய மக்கள் கிரெடிட் கார்டு மூலம் கடன் வாங்கி செலவு செய்யும் அளவு இதுவரை இல்லாத அளவில் அதிகரித்துள்ளது.
கிரெடிட் கார்டு கடன் அளவு அதிகம்
சமீபத்தில் வழங்கிய ரிசர்வ் வங்கியின் தரவுகளின் படி, "ஆகஸ்ட் மாதத்தில் கிரெடிட் கார்டு மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்ட தொகை ரூ.1.48 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஜூலை மாதம் 1.45 லட்சம் கோடியாக இருந்தது.
இந்த இரு மாதங்களிலும், இந்திய மக்கள் கடன் வாங்கும் அளவை, முந்தைய சாதனை அளவான ரூ.1.40 லட்சம் கோடியை முறியடித்துள்ளனர்.
பிரச்சனை
இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை முதல் பண்டிகை காலம் துவங்கப்பட்டதை முன்னிட்டு, மக்கள் அதிகமாக கிரெடிட் கார்டு மூலம் கடனை வாங்க ஆரம்பித்துள்ளனர். இது, ஏற்கனவே கடனில் இருக்கும் மக்கள், கடனை திருப்பி செலுத்த முடியுமா என்ற அச்சம் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தியர்களிடையே அதிகரித்து வரும் கடன் சுமை மற்றும் சேமிப்பு அளவில் வீழ்ச்சி காரணமாக அவர்கள் செலவு செய்வதும் அதிகமாகியுள்ளது. அவர்களுக்கு ஏற்படும் வருமான பிரச்சனை மற்றும் மன அழுத்தம் காரணமாக கடன் வாங்குகின்றனர்.
இது குறித்து ரிசர்வ் வங்கி தரப்பில், "நாட்டில் ஏற்படும் பாதுகாப்பற்ற கடன் அதிகரிப்பு நிதி பிரச்சனையை ஏற்படுத்தும். அதிக வட்டி விகிதங்கள் மற்றும் உயர் பணவீக்கத்திற்கு இடையில் மக்களுக்கு பணத்தை திருப்பி செலுத்த முடியாத நிலையும் ஏற்பட வாய்ப்புள்ளது" எனக் கூறப்பட்டுள்ளது.
தனிநபர் கடன்
இந்தியாவில் 1.4 பில்லியன் மக்கள்தொகை கொண்ட நிலையில் குறைந்த பண புழக்கம் உள்ளது. இந்த சூழ்நிலையில், சில்லறை விற்பனைகள் அதிகரித்ததால், இந்த செலவை சமாளிக்க கடன்கள் மூலம் சமாளிக்க தூண்டப்படுகின்றனர்.
கொரோனா காலகட்டத்திற்கு பிறகு, வங்கிகள் தங்களது இருப்பைக் காட்டிக் கொள்ளவும், கடன் வர்த்தகத்தை அதிகரிக்கவும் தனி நபர் கடனை விரிவுபடுத்தியுள்ளன. இதனால், இக்காலத்தில் வணிக கடன்களுக்கான டிமாண்ட் பெரிய அளவில் குறைந்துள்ளது என்றே சொல்லலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |