பத்திரமாக இருங்கள்., கனடாவில் உள்ள இந்தியர்களுக்கு எச்சரிக்கை!
கனடாவில் தலைநகர் ஒட்டாவாவில், கோவிட்-19 தடுப்பூசி ஆணைக்கு எதிராக கனடாவில் உள்ள டிரக் ஓட்டுனர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், கனடாவில் உள்ள இந்தியர்களுக்கும் அந்நாட்டுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளவர்களுக்கும் இந்திய உயர் ஸ்தானிகராலயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனடாவிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், ஒட்டாவாவில் இடம்பெற்று வரும் பாரிய போராட்டங்களுக்கு மத்தியில் இந்தியர்கள் "அதிக எச்சரிக்கையுடன்" இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளதுடன், 'எச்சரிக்கையுடன் இருக்குமாறு' அழைப்பு விடுத்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கனேடிய அரசாங்கம் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.
கனடாவில் நடந்து வரும் போராட்டங்களால் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், டவுன்டவுன், ஒட்டாவா போன்ற போராட்டங்கள் மற்றும் பெரிய கூட்டங்கள் நடைபெறும் பகுதிகளை தவிர்க்குமாறு இந்திய உயர் ஸ்தானிகராலயம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஒட்டாவாவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஊரடங்குச் சட்டம் உட்பட உள்ளூர் அதிகாரிகளால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு மக்களுக்கு பரிந்துரைத்துள்ளது.
கனடாவில் நடந்து வரும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் உருவாகி வரும் சூழ்நிலைகள் தொடர்பான தகவல்களை உள்ளூர் ஊடகங்களின் மூலம் அறிந்து வைத்திருக்குமாறும் உயர் ஸ்தானிகராலயம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
கூடுதலாக, கனடாவில் நடந்து வரும் போராட்டங்களால் துயரத்தில் இருக்கும் இந்தியர்களுக்கு உதவுவதற்காக அவர்களால் சிறப்பு அவசர உதவி எண் - (+1) 6137443751 - அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
Advisory for Indian Citizens in Canada or planning travel to Canada- Please take all precautions in light of the ongoing protests and public disturbance in Ottawa and other major Canadian cities.
— India in Canada (@HCI_Ottawa) February 8, 2022
Special #Helpline for distressed Indian citizens in Canada- ☎️ 6137443751 pic.twitter.com/jNLodQuphU
மேலும், இந்திய குடிமக்கள் ஒட்டாவாவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் அல்லது ரொறண்ரோ மற்றும் வான்கூவரில் உள்ள இந்திய தூதரகங்களில் தங்கள் இணையதளங்கள் அல்லது MADAD போர்டல் மூலம் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கனடாவில் உள்ள இந்திய குடிமக்களை அவசரநிலையில் தொடர்பு கொள்ள உயர் ஸ்தானிகராலயத்திற்கு இந்த பதிவு உதவியாக இருக்கும்.
இந்த ஆலோசனை அறிக்கையில், ஒட்டாவா மற்றும் கனடாவின் பல நகரங்கள் சாலை மறியல், பெரிய கூட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்கள் ஆகியவற்றுடன் போராட்டங்களைக் காண்கின்றன என்று இந்திய உயர் ஸ்தானிகராலயம் குறிப்பிட்டது.
மற்ற நகரங்களில் உள்ள உள்ளூர் அதிகாரிகளும் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று ஒட்டாவாவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.