இந்தியாவில் இடம் கிடைக்காமல்... வெளிநாட்டு அணிக்காக விளையாடி வரும் வீரர்களைப் பற்றி தெரியுமா? இதோ புகைப்படத்துடன்
இந்தியாவில் பிறந்து இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காமல் வேறொரு நாட்டிற்கு விளையாடி வரும் வீரர்களை சிலரைப் பற்றி பார்ப்போம்.
உலக அளவில் சிறந்த கிரிக்கெட் அணியாக இந்தியா இருந்து வருகிறது. குறிப்பாக கங்குலி, டோனி தற்போது கோஹ்லி போன்றோர் கேப்டனாக வந்த பின், இந்திய அணியை ஒரு அசைக்க முடியாத அணியாக வடிவமைத்துள்ளனர்.
இதனால் இந்திய அணியில் இடம் கிடைப்பது என்று பெரிய விஷயமாக உள்ளது. என்ன தான் திறமைகள் இருந்தாலும், அதையும் உடைக்கும் அளவிற்கு மற்றொரு வீரர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிவிடுவார்.
இதன் காரணமாக வீரர்களை தேர்வு செய்வதில், இந்திய தேர்வு குழுவுக்கு கடும் சிக்கலாகவே இருக்கும். இந்நிலையில், இப்படி இந்தியாவில் பிறந்து இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காமல் வேறொரு நாட்டிற்கு விளையாடி வரும் வீரர்களைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?
கிருஷ்ணா சந்திரன்
கேரளா மாநிலத்தை சேர்ந்த இவர், அங்கிருக்கும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் இடம் கிடைக்காமல், தற்போது ஐக்கிய அரபு அமீரக அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது வரை 12 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள இவர் 134 ஓட்டங்களும் 7 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
சுவப்னில் பாட்டில்
மும்பையை சேர்ந்த இவர், 19 வயதிற்குட்பட்டோருக்கான அணியில் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக அறிமுகமாகியுள்ளார்.
இவருக்கும் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போய்விட, கடந்த 2014-ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகம் பறந்த இவர் அங்கு அந்நாட்டு அணிக்காக விளையாடி வருகிறார். இவர் தற்போது 13 ஒருநாள் போட்டிகளிலும் 18 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
ஜீத் ரவல்
குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஜீத் ரவல் அந்த மாநிலத்திற்காக விளையாடி வந்துள்ளார். குறிப்பாக பியூஸ் சாவ்லா, இஷாந்த் ஷர்மா, ரவிந்திர ஜடேஜா ஆகியோர் உடன் விளையாடி இருக்கிறார்.
ஆனாலும், இந்திய அணியில் இடம் கிடைக்காத காரணத்தினால், நியூசிலாந்து சென்று இவர், அந்த நாட்டிற்காக தற்போது வரை விளையாடி வருகிறார். 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
முனீஸ் அன்சாரி
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான மலிங்காவை போல் வீசும் முனீஸ் அன்சாரி, ஓமன் நாட்டிற்கு சென்று, அங்கு அந்நாட்டு அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது வரை அந்த நாட்டிற்காக 11 டி20 போட்டிகளில் அடி 8 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.