கனடாவில் இந்தியர்களுக்கு அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புகள்: கவலை தெரிவித்த வெளிவிவகார அமைச்சகம்
கனடாவில் உள்ள இந்திய சமூகத்தைச் சேர்ந்த சிலருக்கு மிரட்டி பணம் பறிக்கும் அச்சுறுத்தல் அழைப்புகள் வந்ததாக வெளியான தகவல் குறித்து இந்திய அரசாங்கம் கவலை தெரிவித்துள்ளது.
இந்திய சமூகத்தினரை மிரட்டி
குறித்த விசகாரம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவிக்கையில், கனடாவில் இந்திய சமூகத்தினரை மிரட்டி பணம் பறிப்பதாக வெளியான தகவல் மிகவும் கவலைக்குரிய விடயம் என்று குறிப்பிட்டுள்ளார்.
#WATCH | On Indian Nationals getting extortion calls in Canada, MEA Spokesperson Randhir Jaiswal says, "Indians getting extortion calls in Canada is concerning..." pic.twitter.com/YGxO0NKnxb
— ANI (@ANI) January 4, 2024
மேலும், நாம் விவாதிக்க பல பிரச்சினைகள் உள்ளன என குறிப்பிட்டுள்ள அவர், கோவில் ஒன்று கனடாவில் தாக்கப்பட்டது தொடர்பான பிரச்சனை எழுந்தது என்றும். கனேடிய பொலிசார் விசாரித்த பின்னர், கோவில் வளாகத்தில் அத்துமீறிய நபர் உளவியல் பாதிப்பு கொண்டவர் என்றும் பொலிசார் விளக்கமளித்துள்ளதாக ரந்தீர் ஜெய்ஸ்வால் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களில்
மட்டுமின்றி, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இந்திய சமூக மக்களுக்கு அச்சுறுத்தும் அழைப்புகள் வருவாதாக வெளியான தகவல் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள ரந்தீர் ஜெய்ஸ்வால், கடந்த இரண்டு மாதங்களில் இதுபோன்ற அச்சுறுத்தல்கள் பதிவாகியுள்ளதாகவும், இந்திய அரசாங்கம் அது தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |