பிரித்தானியாவில் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டதுமே கவனம் ஈர்த்துள்ள மற்றொரு இந்திய வம்சாவளியினர்
பிரித்தானியாவின் பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதும், இந்திய வம்சாவளியினர் இருவர் கவனம் ஈர்த்துள்ளார்கள்..
ஒருவர் உள்துறைச் செயலரன பிரீத்தி பட்டேல், மற்றொருவர் சுவெல்லா பிராவர்மேன்.
பிரித்தானியாவின் பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதும், முதல் வேலையாக இந்திய வம்சாவளியினரான பிரீத்தி பட்டேல் தனது உள்துறைச் செயலர் பதவியை ராஜினாமா செய்த விடயம் கவனம் ஈர்த்துள்ளது.
அதேபோல, மற்றொரு இந்திய வம்சாவளியினரும் கவனம் ஈர்த்துள்ளார்.
அவர், சுவெல்லா பிராவர்மேன் (Suella Braverman).
REUTERS/Henry Nicholls (REUTERS)
பிரதமர் வேட்பாளர்களில் ஒருவராக களமிறங்கிய சுவெல்லா, ராஜினாமா செய்த பிரீத்தி பட்டேலுக்கு பதிலாக உள்துறைச் செயலராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
42 வயதாகும் சுவெல்லா, தற்போது அட்டர்னி ஜெனரலாக பொறுப்பு வகிக்கிறார்.
சுவெல்லா உள்துறைச் செயலராகும் பட்சத்தில், அவர்தான் லிஸ் ட்ரஸ்ஸின் அரசில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒரே இந்திய வம்சாவளியினராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.