கனடாவில் இந்திய வம்சாவளியினர் சுட்டுக் கொலை: பொலிசார் தீவிர விசாரணை
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில், இந்திய வம்சாவளியினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
பொலிசாருக்குக் கிடைத்த தகவல்
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், சனிக்கிழமை, மாலை 5.00 மணியளவில், ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார், கார் பார்க்கிங் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றிற்குள், ஒருவர் உட்கார்ந்திருந்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதைக் கண்டுள்ளனர்.
யார் அந்த நபர்?
பொலிஸ் விசாரணையில், கொல்லப்பட்ட நபர் Abbotsfordஇல் வாழ்ந்துவந்த ககன்தீப் (Gagandeep Sandhu, 29) என்பது தெரியவந்துள்ளது.
இந்திய வம்சாவளியினரான ககன்தீப்பைக் குறிவைத்து யாரோ சுட்டுக்கொன்றுள்ளதாக பொலிசார் கருதுகின்றனர். ஆகவே, இந்த சம்பவத்தால் பொதுமக்களுக்கு ஆபத்து எதுவும் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட கார்
இதற்கிடையில், 15 நிமிடங்களுக்குப் பின், சம்பவம் நடந்த இடத்திலிருந்து ஆறு கிலோமீற்றர் தொலைவில், கார் ஒன்று எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஒரு குறிப்பிட்ட பகுதியில், இதுபோல ஒரு குற்றச்செயலைச் செய்துவிட்டு, அந்த குற்றச்செயலில் பயன்படுத்தப்பட்ட வாகனத்தை தீவைத்து எரிக்கும் ஒரு கும்பல் உள்ளது.
ககன்தீப் கொலைக்கும் அந்த கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |