இந்திய கலாச்சாரங்கள் வழியே உயிர் பன்முகத் தன்மையில் ஏற்படும் சிறப்புகள்

india indian culture indian bio diversity indian language world history indian history save nature
By Fathima Jan 31, 2022 01:41 PM GMT
Report

கலாச்சாரம் என்பது பல தலைமுறைகளின் நீண்டகால தொடர் செயல்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பு. இந்த அனுபவங்கள் சந்ததி சந்ததியாக பரிமாறப்பட்டும், மெருகேற்றப்பட்டும், அடுத்த தலைமுறைக்கான வாழ்வியல் அறிவையும், நெறிமுறைகளையும் வழங்கி வருகிறது.

இந்த கலாச்சார அமைப்புகள் இடத்திற்கு இடம் அதன் பருவ நிலைக்கு ஏற்பவும், அதன் தேவைக்கேற்பவும் தகவமைத்துக் கொள்வதே அதன் இயல்பு. அதைப்போலவே உயிர் பன்முகத்தன்மை பல்வேறு வகையான உயிர் அமைப்புகள் அவற்றுள் பல்வேறு வகையான மரபணு வித்தியாசங்கள் அவை தங்களின் சுற்றுசூழலுக்கு ஏற்பவும், அவற்றின் தேவைக்கேற்பவும் தங்களை மேம்படுத்திக் கொண்டும், வித்தியாசப்படுத்திக் கொண்டும் உயிர் வாழ்வதே இதன் இயல்பு.

இத்தகைய பல்வேறு வேறுபாடுகளை தங்களுள் கொண்டுள்ள இந்த கலாச்சார முறைகளும், உயிர்பன்முகத்தன்மையும் ஒன்றுடன் ஒன்று இணைந்தும், ஒன்றை மற்றொன்று பாதுகாத்தும் வருகிறது. பல்வேறு ஆய்வுகளின் கூற்றுப்படி எங்கு அதிகப்படியான கலாச்சாரங்களின் தொகுப்பு இருக்கிறதோ, அங்கு பல்லுயிர் தன்மையும் அதிகப்படியாக காணப்படுகிறது.

அவ்வாறே, இந்தியாவும் பல்லுயிர்தன்மை கொண்ட முக்கிய பகுதியாகவும், பல்வேறு கலாச்சார வேறுபாடுகள் கொண்ட பகுதியாகவும் கருதப்படுகிறது. இதற்கு பூமியில் இந்திய துணைக்கண்டத்தின் அமைவிடம் முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகிறது. இந்தியா வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகளில் அமைந்திருப்பதால் இங்கு உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளும், உயிர்கள் தோன்றுவதற்கான அதிகப்படியான வாய்ப்புகளும் இருப்பதால், பல்வேறு இனமக்களின் படையெடுப்புகளும், படையெடுப்புகளால் பல்வேறு கலாச்சாரங்களும் மற்றும் பல்லுயிர் தன்மை கொண்ட முக்கிய பகுதியாகவும் இந்திய காணப்படுகிறது.

புத்தரின் சொல்படி "இங்கு எல்லா விஷயங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டும் அவற்றின் ஓட்டுமொத்த ஆரோக்கியமும் பிரிக்கப்பட முடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன மேலும் இங்கு தன்னாட்சி கொண்டது என்பது எதுவும் இல்லை"இந்திய கலாச்சாரம் மற்றும் இந்திய பல்லுயிர் தன்மையானது மத, இன, மொழி, பழக்கவழக்கம், மூடநம்பிக்கை, மருத்துவம், உணவு, பொருளாதாரம் போன்ற காரணிகளால் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு பாதுகாக்கப்படும் வருகிறது.

இந்திய பூர்வகுடிகள் மற்றும் மலைவாழ் மக்களின் கலாச்சார நம்பிக்கையும், பல்லுயிர் தன்மையின் தொடர்பும்

இந்தியா பல்வேறுபட்ட இனங்களையும், மொழிகளையும், நில அமைப்புகளையும் கொண்டு காணப்படுவதால் இங்கு பலதரப்பட்ட கலாச்சாரத்தையும், நம்பிக்கையும் கொண்டதாக காணப்படுகிறது. அனைத்து கலாச்சாரமும், நம்பிக்கையும் அந்த இனக்குழுவின் வாழ்வை முன்னகர்த்தி செல்லும் வழிமுறைகளை உள்ளடக்கியுள்ளது.

அவ்வாறு அவர்களின் வாழ்வை முன்னகர்த்தி செல்லும் விஷயங்களை அவர்கள் வழிபட்டும், பாதுகாத்தும் வந்திருக்கிறார்கள். இந்தியாவை பொருத்தவரை பல பூர்வகுடிகள் மற்றும் மலைவாழ் மக்கள் தங்களின் கலாச்சார நம்பிக்கைகள் மூலம் தங்களின் வாழ்வாதாரமான இயற்கை வளத்தையும், பல்லுயிர் தன்மையையும் பாதுகாத்து வருகிறார்கள்.

இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள காசி(khasi) மலைவாழ் மற்றும் பூர்வ குடிமக்கள் தாங்கள் சொர்க்கத்தில் வாழ்ந்ததாகவும் விவசாய நிலமாக மட்டுமே இந்த பூமி இருந்ததாகவும் சில கெட்ட ஆன்மாக்களின் தூண்டுதலால் பூமிக்கும். சொர்க்கத்திற்கும் இணைப்பு பாலமாக இருந்த பெரிய மரத்தை வெட்டியதால் அவர்கள் சொர்க்கத்தின் தொடர்பை இழந்து பூமியிலேயே இருக்க நேரிட்டதாகவும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

இவர்கள் இயற்கை வடிவங்களை(totemic) தெய்வங்களாக வழிபட்டு வருகின்றார்கள். இயற்கையை காயப்படுத்துவது தங்களின் கடவுளை காயப்படுத்துவதாக கருதுகிறார்கள் மேலும் அவர்களின் புனித வனப்பகுதிக்குள் வேட்டையாடுதல் மற்றும் மரங்களை வெட்டுதல் போன்றவை தடை செய்துள்ளனர்.

இந்திய கலாச்சாரங்கள் வழியே உயிர் பன்முகத் தன்மையில் ஏற்படும் சிறப்புகள் | Indias Cultural Connection With Biodiversity 

இதனைப்போலவே மேற்கு இமயமலை தொடரில் உள்ள போட்டியா(Bhotiya) மலைவாழ் மக்களும் தங்களின் புனித வனப்பகுதிகான சட்டங்களை வகுத்துள்ளனர். இந்த பகுதிக்குள் மரங்களை வெட்டுதல் மற்றும் வேட்டையாடுதலை தடை செய்துள்ளனர். மேலும் புனித வனப்பகுதியில் உள்ள அவர்களின் கடவுளை சுற்றியுள்ள குறிப்பிட்ட பகுதி வரை பயிரிடுவதற்கும் தடை செய்துள்ளனர்.

இத்தகைய கட்டுப்பாடுகள் மூலம் அவர்களின் இறையாண்மை பாதுகாக்கப்படுவதாக கருதுகிறார்கள். இமய மலைத்தொடரை சார்ந்து பல்வேறு இனக்குழுக்கள் அமைந்திருப்பதால் பல்வேறு கலாச்சார முறைகளால் சிறந்த பன்முகத்தன்மை கொண்ட பகுதியாக அறியப்படுகிறது.

கலாச்சார பன்முகத்தன்மை என்பது மனித வாழ்க்கையில் மட்டுமல்லாமல் உயிர்களின் பன்முகத்தன்மையிலும் எதிரொலிக்கிறது. பல்வேறு கலாச்சாரங்கள் பல்வேறுபட்ட உயிர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதால் உயிர்களின் பன்முகத்தன்மை பராமரிக்கப்பட்டும், பாதுகாக்கப்பட்டும் வருகிறது. இந்தியாவை பொருத்தவரை பல்லுயிர் தன்மை என்பது இந்திய கலாச்சாரத்துடன் வேரூன்றியுள்ளது.

உதாரணமாக குஜராத்தில் 50 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு இன, மத. சமூக வேறுபாடுகள் கொண்டு வாழ்கிறார்கள். 2001 வருட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி குஜராத்தில் மொத்த மக்கள்தொகையில் 15 சதவிகிதம் மலைவாழ் மக்கள் வாழ்கின்றனர். இந்த மக்கள் தங்களைச் சுற்றியுள்ள உயிர்களை பாதுகாப்பதை அவர்களது பாரம்பரியமாகவும், நம்பிக்கையாகவும் கொண்டுள்ளனர்.

இதனை அவர்கள் -ஜீவ்தயா"(Jeev Daya = Compassion for life}) வாழ்வுக்கான இரக்கமாக கருதுகின்றனர். இவ்வாறு பல்வேறு இனக்குழுக்கள் தங்களின் நம்பிக்கையின் அடிப்படையிலும், பாரம்பரியத்தின் அடிப்படையிலும் பல்வேறுபட்ட உயிர்களை பாதுகாப்பும் வணங்கியும் வருகின்றனர்.

மத நம்பிக்கையும், பல்லுயிர்தன்மையும்

மதங்கள் என்பது பல்வேறு இன மற்றும் சமூக குழுக்களின் உட்படுத்துகிறது. பெரும்பான்மையான மதங்களின் முதன்மை நீதியாக இயற்கையை மதித்து போற்றுவதையே அறிவுறுத்துகின்றன. புனிதத்தலங்கள், புனிதஆறுகள் போன்ற கோட்பாடுகளின் வழியாக விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாக்கப்படுகிறது.

இஸ்லாம் மதத்தில் கடவுளின் முக்கிய கட்டளையாக உயிர்களை பாதுகாப்பதே உண்மையான மார்க்கம் என குறிப்பிடுகிறது. இஸ்லாமின் புனித நூலான குர்ஆனில் கடவுள் கூறுகிறார் "இங்கு எதுவும் விலங்குகள்  இல்லை ஒவ்வொரு பூச்சிகளுக்கும் அதன் சிறகுகளில் பறக்கும் ஒரு உயிரினம் அதுவும் உங்களைப் போன்ற ஒரு சமூகம்" என்கிறார்.

இந்திய கலாச்சாரங்கள் வழியே உயிர் பன்முகத் தன்மையில் ஏற்படும் சிறப்புகள் | Indias Cultural Connection With Biodiversity

இந்துமத முறைப்படி கடவுள் மட்டுமே அனைத்து உயிர்களுக்கான பொறுப்பு அவற்றின் ஒரு உயிரின வடிவம் பாதிக்கப்பட்டால் அனைத்து உயிரின வடிவமும் பாதிக்கப்படும் மேலும் இந்துமத கூற்றுப்படி போதுமான நியாமான காரணங்கள் படைப்புகளை காயப்படுத்துதல் கூடாது ஏனென்றால், அனைத்து உயிர்களும் சமமான உயிர்வாழும் உரிமை வழங்கப்பட்டுள்ளது!

ரிக் வேதத்தின் தொடக்க காலகட்டத்தில் மரங்களே வழிபாட்டு உருவமாக பார்க்கப்பட்டுள்ளது. வேதங்களில் மட்டுமல்ல பிற்காலத்தில் வந்த உபநிடதங்கள், புராணங்கள் மற்றும் அடுத்தடுத்த நூல்களில் இயற்கையை பற்றிய இந்துமத பார்வை தெளிவாக விவரிக்கிறது. இத்தகைய பார்வையின் வெளிப்பாடாக சிப்கோ புரட்சியின் மூலம் வர்த்தக சுரண்டலில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

புத்தமதத்தின் கூற்றுப்படி சரியான செயல்கள் நிர்வானா(Nirvana} என்ற மோட்ச நிலைக்கும், தீய செயல்கள் அவர்களின் இலக்குகளில் இருந்து விலக்கி கொண்டு செல்லும், பிற உயிர்களுக்கு கேடு செய்தல் என்பது நமக்கு நாமே செய்யும் கேடு என்று புத்தமதம் கூறுகிறது, மேலும் இயற்கையை வணங்குதல் என்பது அத்தியாவசியம் என்றும் எளிமையாக வாழ்வதே அனைத்து உயிர்களிடத்திலும் உள்தொடர்பு ஏற்படுத்தும் முறை என்கிறது.

ஜெயின் மத கூற்றுப்படி அகிம்சை மற்றும் ஆசைகளைத் துறப்பதே உடலைத் துறந்து ஆத்மாவுக்கு சுதந்திரம் வழங்கும் வழி என்கிறது. ஒவ்வொரு மதமும் பல்வேறு கோணங்களிலிருந்தும், பல்வேறு திசைகளிலிருந்தும் புறப்பட்டு இலக்கு ஒன்றை நோக்கிய பயணிக்கிறது. சில மதங்கள் கடவுளின் சின்னமிக்கும். கடவுளின் நண்பர்களாகவும் விலங்குகள், பறவைகள், தாவரங்கள் போன்றவற்றை காட்சிப்படுத்துகிறது. இதன் மூலம் அந்த விலங்குகள் பறவைகள் மற்றும் தாவரங்கள் பாதுகாக்கப்படுகிறது. 

இந்திய மொழிகளும் பல்லுயிர்தன்மையும்

இந்தியா என்பது பல்வேறுபட்ட கலாச்சார இன மற்றும் மொழி வேறுபாடுகள் கொண்ட நாடு. வரலாற்று ஆசிரியர்(Majumdar) கூற்றுப்படி குறைந்தது ஆறு இனங்களின் கூட்டமைப்பு மொத்த இந்திய மக்களின் வடிவமாக உள்ளது என்கிறார்கள்.

(1) The Negrito (Immigrants form Africa) தி- நெகிரிடோ - ஆப்பிரிக்காவில் இருந்து குடியேறியவர்கள்

(2) The Proto - Australoids (who came from the west) தி புரோட்டோ அஸ்ட்ரோலோய்ட்ஸ்(மேற்கிலிருந்து வந்தவர்கள்)

(3) The Mangoloidia - Living in Assam, Chittagong hills, and Indo Burmese frontiers. தி மங்கோலாய்டா - அசாம், சிட்டகாங் மலை, மற்றும் இந்தோ பர்மிய எல்லைகளில் வசிப்பவர்கள்.

(4) Dravidian The Mediterranean people speaking Dravidian language. திராவிடர்கள் மத்திய தரைக்கடல் மக்கள், திராவிடமொழி பேசுவோர்கள்.

(5) The Alpine, Dinaric, Armenoid - Mainly in Bengal, Odisha, and Gujarat. ஆல்பைன், தினரிக் மற்றும் ஆர்மனாய்டு - இன்றைய வங்காளம், ஒடிசா, குஜராத்தில் வாழ்பவர்கள்.

(6) The Nordic group - Speaking the Aryan language. ஆரியர்கள் -ஆரிய மொழி பேசுவோர்கள். 

இந்திய கலாச்சாரங்கள் வழியே உயிர் பன்முகத் தன்மையில் ஏற்படும் சிறப்புகள் | Indias Cultural Connection With Biodiversity

 டேவிட் ஹார்மன்( உயிர் பாதுகாப்பாளர், Conversationist) 25 நாடுகளில் நடத்திய எண்டீமிஸ்யம் (Endemism) ஆய்வின்படி அதிகப்படியான மொழி வேறுபாடுகள் கொண்ட பகுதியில் அதிக அளவிலான தாவரங்கள் பறவைகள் படிநிலையில் உயர்ந்த நிலையுள்ள முதுகெலும்புயிரிகள் பரவி காணப்படுகின்றன என்கிறார். இந்த எண்டிமிபம்(Endemism) ஆய்வு புவியியல் அமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் கூறுகளை கொண்டு மேற்கொள்ளப்படுகிறது.

Indonesia, India, Australia போன்ற நாடுகள் மொழி பன்முகத்தன்மை கொண்டதாகவும், அதிக பல்லுயிர் தன்மை கொண்ட நாடுகளின் பட்டியலிலும் இடம் பெறுகிறது. மொழிகளின் பன்முகத்தன்மை என்பது உயிர்களின் மந்தநிலை மற்றும் சலிப்பூட்டும் தன்மையை உடைக்க உதவுகிறது. மொழி என்பது ஒரு இனத்தின் கலாச்சார பரிமாற்றத்திற்கு மட்டும் உதவாமல் அவர்களின் இயற்கை பற்றிய பாரம்பரிய அறிவையும் கடத்த உதவுகிறது.

இந்திய அரசு மொழிகளையும் 234 தாய் 122 மொழிகளையும், தனித்துவமான நிலப்பரப்பையும் கொண்டதாக விளங்குகிறது. இதன் மூலம் அந்தந்த மொழி குழுக்களின் பாரம்பரிய அறிவு கடத்தப்பட்டு இயற்கை பாதுகாக்கப்படுகிறது. மொழிகளின் பன்முகத்தன்மை அதிகரிப்பு என்பது பல உயிர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும், மொழிகளின் இழப்பு என்பது கலாச்சார மற்றும் பாரம்பரிய அறிவின் இழப்பாகவே பார்க்கப்படுகிறது.

முடிவுரை: 

உலக பொருளாதாரத்தில் 40 சதவிகிதமும், நலிவடைந்த மக்களின் 80 சதவிகித வாழ்வியல் பொருளாதாரமும் இயற்கை வளங்களையே நம்பியுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர்களின் பொருளாதார கூட்டமைப்பின் (TEE8 - The Economics of Ecosystem and Biodiversity) எதிர்பார்ப்பு படி 2050 ஆண்டு வரை இயற்கை வளங்களின் மீதான பொருளாதார முதலீடு 2 to 6 trillion அமெரிக்க டாலர் என்பது பொருத்தமாக இருக்கலாம் என்கிறது.

இந்திய கலாச்சாரங்கள் வழியே உயிர் பன்முகத் தன்மையில் ஏற்படும் சிறப்புகள் | Indias Cultural Connection With Biodiversity

பெரும்பாலான மக்கள் இயற்கை வளங்களை நம்பியே தங்களின் வாழ்க்கையை முன்னிறுத்துகின்றனர். இந்தியாவைப் பொருத்தவரை பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் இயற்கை வளங்களை சார்ந்த தொழில்களை கொண்டே அவர்களின் பொருளாதாரம் நகர்கிறது. குறிப்பாக 90 சதவிகித தாவரங்கள் மருத்துவ துறைக்காக இந்திய காடுகளில் பயிரிடப்படுகிறது.

இவ்வாறு அனைத்து மக்களும் ஒவ்வொரு உயிர்களால் பயன் அடைவதால் இந்திய மக்கள் அவற்றை தங்கள் கலாச்சாரத்தாலும், மதநம்பிக்கை மூலமும் பல்வேறு உயிர்களை பாதுகாத்து வருகின்றனர். இந்தியாவின் பன்முகத்தன்மை என்பது வெறும் கலாச்சார, மத, மொழி வேறுபாடுகள் கொண்டது மட்டுமல்ல, ஒவ்வொரு வேறுபாட்டிலும் ஒவ்வொரு இன, மத, மொழி குழுக்களின் அறிவு தொகுப்பு அடங்கியுள்ளது.

இந்த அறிவுகளின் தொகுப்பே இந்திய ஒன்றியத்தை பல்லுயிர்கள் வாழும் ஒற்றை நிலமாக மாற்றுகிறது. பன்முகத்தன்மையில் ஏற்றுமையை அடைவதற்கான நமது திறன் நமது நாகரிகத்தின் அழகும் சோதனையும் ஆகும் என்றார் மகாத்மா காந்தி, அதுபோல வேற்றுமை என்னும் சோதனைகளை கடந்து வேற்றுமையை பலம் என்ற அழகுடன் திகழ்கிறது இந்தியா.


இந்த கட்டுரை ”திருவேங்கடம்“ என்ற செய்தி ஆசிரியரால் எழுதப்பட்டது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

07 May, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

05 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, மயிலிட்டி, கொழும்பு

08 May, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Reading, United Kingdom

25 Apr, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Aulnay-sous-Bois, France

01 May, 2025
மரண அறிவித்தல்

கரணவாய் மேற்கு, Urtenen-Schönbühl, Switzerland, பேர்ண், Switzerland

08 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

10 May, 2021
மரண அறிவித்தல்

யாழ் சுன்னாகம் மேற்கு, Jaffna, Surrey, United Kingdom, Tolworth, United Kingdom

22 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி

31 May, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, London, United Kingdom

09 May, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், உருத்திரபுரம்

21 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி, கொழும்பு, Bobigny, France

24 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
3ம், 4ம் ஆண்டு நினைவஞ்சலிகள்
மரண அறிவித்தல்

மாமூலை, துணுக்காய், பூந்தோட்டம்

08 May, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Palermo, Italy, Hannover, Germany, Münster, Germany

02 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கந்தர்மடம்

08 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கொழும்பு, Edinburgh, Scotland, United Kingdom, London, United Kingdom, Manchester, United Kingdom, Minneapolis, United States, Winnipeg, Canada, Philadelphia, United States, New Jersey, United States

02 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
1ஆம் ஆண்டு நினைவஞ்சலி 14ஆம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பிரித்தானியா, United Kingdom

17 Apr, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, ஏழாலை சூராவத்தை, Markham, Canada

05 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

16 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, வண்ணாங்குளம்

04 May, 2010
மரண அறிவித்தல்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US