இந்தியாவின் முதல் 3டி பிரிண்டெட் தபால் நிலையம்; கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர்
இந்தியாவின் முதல் 3டி அச்சிடப்பட்ட அஞ்சல் அலுவலக கட்டிடத்தை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திறந்து வைத்தார்.
தொழில்நுட்பம் வேகமாக முன்னேறி வருகிறது. ஒரு கட்டிடம் கட்ட பல மாதங்கள் ஆகும் என்ற காலம் போய்விட்டது. மாறாக சில நாட்களில் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்படும்.
பெங்களூரில் கட்டப்பட்டுள்ள 3டி அச்சிடப்பட்ட தபால் நிலைய கட்டிடத்தை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திறந்து வைத்தார். இது நாட்டின் முதல் 3டி பிரின்டிங் தொழில்நுட்பத்தால் கட்டப்பட்ட தபால் நிலைய கட்டிடம் ஆகும்.
Photo Credit: Sudhakara Jain
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 18, 2023) பெங்களூரு ஹலசூரில் நாட்டின் முதல் முப்பரிமாண அஞ்சல் அலுவலகக் கட்டிடத்தை திறந்து வைத்தார்.
3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பெங்களூரில் அச்சிடப்பட்ட இந்த 1021 சதுர அடி கட்டிடம் வெறும் 45 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டது.
கட்டுமான பணிகள் தொடர்பான வீடியோவை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 3டி தபால் நிலைய கட்டிட திறப்பு விழாவில் பேசிய அமைச்சர், பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியை பாராட்டினார். இதுபோன்ற கட்டிடங்களால் நேரமும் செலவும் மிச்சமாகும் என்றார். முப்பரிமாண தபால் நிலையத்தை உருவாக்கி நாட்டிற்கு உத்வேகம் அளித்ததற்காக அவர் பாராட்டப்பட்டார்.
The spirit of Aatmanirbhar Bharat!
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) August 18, 2023
??India’s first 3D printed Post Office.
?Cambridge Layout, Bengaluru pic.twitter.com/57FQFQZZ1b
பெங்களூரு ஹலசூரில் உள்ள கேம்பிரிட்ஜ் லேஅவுட்டில் 1021 சதுர அடி பரப்பளவில் இந்த 3டி கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எல்&டி நிறுவனம் 3டி கான்கிரீட் பிரிண்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டுமானப் பணிகளை முடித்தது.
கட்டிடப் பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு கவுன்சில் (பிஎம்டிபிசி) ஏப்ரல் 2023 இல் முன்மொழியப்பட்ட 3டி கட்டிடத் திட்டத்தை அங்கீகரித்த நிலையில், எல் அண்ட் டி நிறுவனம், ஐஐடி மெட்ராஸ் உடன் இணைந்து இது நிறைவடைந்ததாக வெளிப்படுத்தியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
India’s first 3D printed Post Office, Bengaluru, India, 3D Printing technology, 3D Printed Building, 3D printed Post Office, 3D Concrete Printing Technology, Larsen and Toubro