ரூ.18 கோடியில் நடமாடும் ஷோரூமை அறிமுகப்படுத்திய எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம்
இந்தியாவில் நடைபெற்றுவரும் Auto Expo-வில் ரூ.18 கோடியில் நடமாடும் ஷோரூமை எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனமொன்று காட்சிப்படுத்தியுள்ளது.
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025-இல் Goldmedal Electricals ஒரு நவீன ஷோரூமை வெளியிட்டுள்ளது.
இது ஒரு நடமாடும் ஷோரூம் (showroom on wheels) என்று விவரிக்கப்படுகிறது.
பிரபல ஆட்டோமோட்டிவ் டிசைனர் திலீப் சாப்ரியா (Dilip Chhabria) இந்த ultra-premium showroom-ஐ கோல்ட்மெடல் நிறுவனத்துடன் இணைந்து வடிவமைத்துள்ளார்.
ரூ.18 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பேருந்தில் மூன்று பக்கங்களில் இருந்து கதவுகளை திறக்கமுடியும்.
Airbus மற்றும் Boeing விமானங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் அதே முறையை இந்த பேருந்து தயாரிப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனுடன், 5000 வெவ்வேறு வடிவமைப்புகளில் வேலை செய்யப்பட்டுள்ளது, பின்னர் இந்த வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Auto Expo 2025, Goldmedal Electricals, India’s First Mobile Showroom, Bharat Mobility Global Expo 2025