இந்தியாவின் முதல் தனியார் பிராண்டட் ரயில் - Sprite Tejas Express
India's first private branded train: இந்தியாவின் முதல் தனியார் பிராண்டட் ரயில் அறிமுகமாகிறது.
இந்திய ரயில்வேயின் புதிய முயற்சியாக, தனது பிரீமியம் ரயில்களில் ஒன்றான லக்னோ - டெல்லி - லக்னோ தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு Sprite பிராண்டிங் வழங்கியுள்ளது.
இதன் மூலம், இந்தியாவில் முதல் முறையாக ஒரு பயணிகள் ரயில் தனியார் பிராண்டட் ரயிலாக இயங்குகிறது.

ஆறு மாதங்களுக்கு விளம்பர உரிமை
இந்த திட்டத்தின் கீழ், IRCTC நிறுவனம் Sprite நிறுவனத்துக்கு ஆறு மாதங்களுக்கு விளம்பர உரிமையை வழங்கியுள்ளது.
ஆகஸ்ட் 19 முதல் நவம்பர் 11, 2026 வரை, ரயில் எண் 82501 மற்றும் 82502 Sprite Tejas Express என அழைக்கப்படும். இது ரயில்வேவிற்கு புதிய வருவாய் வாய்ப்புகளை உருவாக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே ரயில்வே நிலையங்கள், ரயில்கள் மற்றும் பிற சொத்துகளில் விளம்பரங்கள் மூலம் வருவாய் ஈட்டுகிறது. இப்போது, ரயிலின் பெயரே ஒரு பிராண்டுடன் இணைக்கப்படுவது, பயணிகளுக்கு புதிய அனுபவமாக இருக்கும்.
தேஜஸ் எக்ஸ்பிரஸ்
தேஜஸ் எக்ஸ்பிரஸ், இந்தியாவின் பிரீமியம் ரயில்களில் ஒன்றாகும். பயணிகளுக்கான உணவு, பானங்கள், பொழுதுபோக்கு வசதிகள் உள்ளிட்ட நவீன சேவைகள் இதில் வழங்கப்படுகின்றன.
மேலும், குழு முன்பதிவு வசதி உள்ளதால், நிறுவன கூட்டங்கள், திருமணங்கள் போன்ற நிகழ்வுகளுக்காக முழு AC Chair Car coach-ஐ முன்பதிவு செய்யலாம்.
இந்த ரயில் முதன்முதலில் 2021 டிசம்பர் 3 அன்று, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களால் தொடங்கப்பட்டது.
இப்போது Sprite பிராண்டிங் மூலம், இந்திய ரயில்வே தனது வருவாய் வாய்ப்புகளை விரிவுபடுத்தும் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.
இந்த முயற்சி, டிக்கெட் விலையை உயர்த்தாமல் ரயில்வேக்கு கூடுதல் வருவாய் ஈட்டும் வழியை உருவாக்கும். இது எதிர்காலத்தில் மற்ற ரயில்களுக்கும் தனியார் பிராண்டிங் வாய்ப்புகளைத் திறக்கக்கூடும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |